2026: நாளை ஐப்பசி பௌர்ணமி என்ன செய்யவேண்டும்...அன்னாபிஷேகத்தின் மகிமைகள்
2026 ஆம் ஆண்டு நாளை நவம்பர் 25ஆம் தேதி ஐப்பசி பௌர்ணமி வருகிறது. இந்த தினத்தில் சிவபெருமானுக்கு மிக உகந்த நாளாக விளங்குகிறது. இந்த நாளில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.
அன்னாபிஷேகம் ஏன் செய்யப்படுகிறது?
ஐப்பசி மாதம் வரக்கூடிய பௌர்ணமி தினத்திற்கு ஒரு தனி சிறப்பு இருக்கிறது. அன்றுதான் சந்திர பகவான் அவருடைய சாபத்திலிருந்து முழுமையாக விடுபட்டு 16 கலைகளுடன் முழு பொலிவுடன் தோன்றினார் என்பது ஐதீகம்.
அதாவது, ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தின் பொழுது சந்திரன் பூமிக்கு நெருக்கமாக வந்து அதிக பொலிவுடன் தோன்றுவார். சந்திரனை முடி மேல் சூடிய ஈசனுக்கு மதி ஒளியுடன் இருக்கும் நாளில் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. நவகிரகங்களில் சந்திர பகவானுக்கு உரிய தானியம், அரிசி என்பதால் அன்றைய தினம் சிறப்பு வழிபாடு அன்னாபிஷேகம் செய்து வழிபாடு செய்யப்படுகிறது.

அபிஷேக பிரியர் சிவன்:
உமை ஒரு பாகனான இருக்கும் சிவபெருமான் அபிஷேகப்பிரியர் ஆவார். ஆதலால், சிவபெருமானுக்கு 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்வது வழக்கம். அவை தூயநீர், பசும்பால், இளநீர், கரும்பு ச்சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமி ர்தம், மாப்பொடி, மஞ்சள், அன்னம் ஆகியன.
இவற்றுள் மிகச் சிறப்பானது அன்னாபிஷேகமே. மேலும், ஒருவன் எந்த மாதிரியான உணவை எடுத்துக் கொள்கிறானோ அதை பொறுத்து அவனுடைய மனம் மாறுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னத்தை கொஞ்சமும் வீணாக்காமல் உண்ண வேண்டும் என்பதை உணர்த்தவும் அன்னத்தின் தெய்வீக தன்மையை எடுத்துக்காட்டவுமே அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
அன்னாபிஷேகம் செய்யும் முறை:
அன்னாஅபிஷேகம் செய்வதற்கு வடித்த சற்றே ஆறவைக்கப்பட்ட அன்னத்தை கொண்டு சிவலிங்க திருமேனி முழுவதையும் மறைத்து பிறகு அதன் மேல் காய் கனி வகைகளை வைத்து அலங்காரம் செய்ய வேண்டும். இந்த நேரங்களில் ஜூர் வேதம், ருத்ரம், சமகம் போன்ற மந்திரங்கள் பாராய ணம் நடைபெறும்.
லிங்கத்தின் ஆவுடையிலும் பாணத்தின் மீதும் சாற்றப்பட்ட அன்னத்தை எடுத்துச் சென்று கோயில் குளத்திலோ இல்லை, ஆற்றிலோ கரைப்பார்கள். அது நீர் வாழ் உயிர்களுக்கு உணவு ஆகும்.

சோறு கண்ட இடம் சொர்க்கம்:
அபிஷேகம் முடிந்த பிறகு மேல் பாகத்தில் சாற்றப்பட்ட அன்னம் மனிதர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
இந்த பிரசாதத்தை ஒருவர் சாப்பிட்டால் நோய் நொடிகள் வராது, குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். சோறு தான் சொக்கநாதர். அதனால்தான் சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று மக்கள் ஒரு பழமொழி சொல்வதுண்டு.
இவ்வளவு அற்புதம் நிறைந்த அன்னாபிஷேகத்தை ஐப்பசி பௌர்ணமி தினத்தன்று தரிசிப்பவர்களுக்கு வாழ்க்கையில் பெறும் புண்ணியம் கிடைக்கிறது. அவர்களுக்கு வறுமை என்பதே வருவதில்லை.
பசியால் வாடாமல் ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கிறது. அதை போல், இந்த நாளில் ஒருவருக்கு அன்னதானம் வழங்குவதும் என்பது ஒரு மிகச்சிறந்த பலனை கொடுக்கும். வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட பாவங்களையும் போக்கக்கூடியது இந்த அன்னதானம் ஆகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |