2026: நாளை நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: அதிரடி திருப்பம் சந்திக்க போகும் ராசிகள் யார்?
ஜோதிடத்தில் செவ்வாய் பகவான் தான் ஒருவருக்கு வீரம், வலிமை ஆகியவற்றை கொடுக்கக் கூடிய கிரகமாக இருக்கிறார். இவர் ஏப்ரல் 24 ஆம் தேதி அன்று ரேவதி நட்சத்திரக்கு இடமாகிறார். பிறகு அவர் மே 11 ஆம் தேதி வரை ரேவதி நட்சத்திரத்தில் இருக்கிறார். இந்த நட்சத்திரத்தின் அதிபதி புதன் பகவான் என்பதால் கிரகங்களின் "இளவரசன்' என்று போற்றப்படுகிறது.
அப்படியாக செவ்வாய் கிரகம் இந்த நட்சத்திரத்தில் இடம் மாறும் பொழுது குறிப்பிட சிலர் ராசிகள் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை பெறப்போகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பகவானின் நட்சத்திரம் மாற்றம் இவர்களுக்கு திடீர் பொருளாதார ரீதியாக உயரத்தை கொடுக்கப் போகிறது. தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகளை தேடி கொடுக்கும். ஒரு சிலருக்கு தலைமைத்துவ பண்பில் சிறந்து விளங்குவார்கள். புதிய வியாபாரம் தொடர்பான கையெழுத்து போடுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பகவானின் நட்சத்திர இடமாற்றம் இவர்களுக்கு ஊடகம் மற்றும் கலை துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்க போகிறது. நீண்ட நாட்கள் நீங்கள் ஆரோக்கிய குறைபாடுகளால் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்றால் அதிலிருந்து விடுபடுவதற்கும் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றமும் பெறக்கூடிய காலகட்டமாகும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பகவானின் இந்த நட்சத்திர இடமாற்றமானது இவர்களுக்கு சமுதாயத்தில் உயர்ந்த மதிப்பை பெற்றுக் கொடுக்கப் போகிறது. தொழில் ரீதியாக இவர்கள் உயர்ந்த நிலைக்கு செல்ல போகிறார்கள். நீண்ட தூர பயணம் வழியாக இவர்களுக்கு நல்ல சாதகமான பலன் கிடைக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகக்கூடிய மாணவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |