2026: ஏப்ரல் 23 முதல் சனிபகவானின் ஆட்டத்தால் கவனமாக இருக்க வேண்டிய 4 ராசிகள்
ஜோதிட சாஸ்திரப்படி சனி பகவான் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இருக்கிறார். அதாவது இவர் சூரியபகவானை ஒருமுறை சுற்றிவரவே சனி பகவான் சுமார் 28 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார். தற்பொழுது மீன ராசியில் சனிபகவான் அஸ்தமனம் ஆகி இருக்கிறார்.
வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி அதே ராசியில் மீண்டும் உதயமாகிறார். இதனால் 4 ராசிகாரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நிலையை கொடுக்கிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு தற்பொழுது ஏழரை சனியின் காலகட்டம். அதனால் இந்த ராசிக்காரர்கள் வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். மற்றவர்களின் பேச்சை கேட்டு எந்த ஒரு முக்கியமான முடிவுகளையும் எடுக்க வேண்டாம். குழந்தைகள் வழியே சில பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு தற்பொழுது அஷ்டம சனி நடக்கிறது. இதனால் சிம்ம ராசிக்காரர்கள் எந்த ஒரு காரியத்தையும் தடங்கல் இல்லாமல் செய்ய வேண்டும் என்றால் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். புதிய தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அதை சிறிது காலம் தள்ளி வைப்பது நல்லது. விருப்பமில்லாத வேலையை செய்ய வேண்டிய நிலை இருக்கும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனியின் தாக்கம் வீடுகளில் ஒரு எதிர்மறையான சூழலை உருவாக்கக்கூடும். பயணம் செல்லும் பொழுது உங்களுடைய உடமைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் மற்றும் அக்கறை செலுத்த வேண்டிய காலகட்டமாகும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் மூன்றாவது கட்டம் நடக்கிறது. இதனால் இவர்களுக்கு மன பதட்டம் அதிகரிக்கலாம். பொருளாதார விஷயங்களில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். எந்த ஒரு பத்திரத்தையும் முழுமையாக படித்து பார்க்காமல் கை எழுத்து போட வேண்டாம். வியாபாரத்தில் சில சிக்கல்களை சந்திப்பீர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |