2026 சனி வக்ர பெயர்ச்சி: யாருக்கு சனி நன்மை செய்ய போகிறார்?

By Sakthi Raj Oct 14, 2026 06:18 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தில் சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இருந்தாலும் அவர் ஒவ்வொருவர் செய்த நன்மை மற்றும் தீமைக்கேற்ப நற்பலன்களையும் தீய பலன்களையும் கொடுக்கக் கூடியவராக இருக்கிறார்.

அந்த வகையில், சனி பகவான் தற்போது மீன ராசியில் வக்ர நிலையில் சஞ்சாரம் செய்து வருகிறார். இவர் டிசம்பர் 11ஆம் தேதி சனி பகவான் நேர்கதியில் பயணிக்க இருக்கிறார்.

இதனால் அடுத்த இரண்டு மாத காலத்திற்கு சனியின் தாக்கம் சில ராசிகளுக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் நன்மையை கொடுக்கப் போகிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

2026 சனி வக்ர பெயர்ச்சி: யாருக்கு சனி நன்மை செய்ய போகிறார்? | 2026 December 11 Saturn Retrograde Prediction

எண் கணிதம்: தொழிலில் சிறந்து விளங்க கோடீஸ்வரர்கள் பின்பற்றும் சூட்சமம் இது தான்

எண் கணிதம்: தொழிலில் சிறந்து விளங்க கோடீஸ்வரர்கள் பின்பற்றும் சூட்சமம் இது தான்

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில் தொடர்பாக ஒரு சில நல்ல வாய்ப்புகள் தேடி வர போகிறது. துணிச்சலாக முடிவுகளை எடுத்து எதிர்காலத்திற்கு தேவையான விஷயங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வேலையில் உங்களுக்கான அங்கீகாரமும் முன்னேற்றமும் கிடைக்கும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக ஒரு நல்ல வாய்ப்புகள் தேடி வர போகிறது. திருமண வாழ்க்கையில் இருந்து வந்த கசப்புகள் விலகும். நீண்ட நாள் மனதில் இருந்த குழப்பம் விலகும். ஒரு முக்கிய நபரை சந்தித்து அவர்களுடைய ஆலோசனையை பெற்று அடுத்த நிலைக்கு செல்ல போகிறீர்கள்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்கள் எதையும் யோசித்து முடிவெடுக்க வேண்டும். திட்டமிடும் செயல்களில் கவனமாக இருப்பது அவசியம். குடும்பத்தினரை அனுசரித்து செல்ல வேண்டும். பேச்சில் இனிமையை கடைப்பிடிப்பது மிக மிக அவசியம்.

நீங்கள் பிறந்த நட்சத்திரம் என்ன? உங்களுடைய குணாதிசயம் பற்றி தெரியுமா?

நீங்கள் பிறந்த நட்சத்திரம் என்ன? உங்களுடைய குணாதிசயம் பற்றி தெரியுமா?

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றம் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தை கொடுக்கப் போகிறது. வேலை தேடுபவர்களுக்கு தகுதியான வேலைவாய்ப்புகள் கிடைக்கும். உழைப்பிற்கேற்ற ஊதியத்தையும் பெறுவீர்கள்.

துலாம்: 

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் பொருளாதாரத்தில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டிய காலகட்டம் ஆகும். பணியிடங்களில் உங்களுடைய பேச்சில் நிதானத்தையும் தெளிவையும் கடைபிடிக்க வேண்டும். யாருக்கும் கடன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.        

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US