2026 அக்னி நட்சத்திரம்: இந்த காலகட்டங்களில் என்ன செய்யவேண்டும்? என்ன செய்யக்கூடாது?
நம்முடைய சாஸ்திரத்தில் அக்னி நட்சத்திரம் என்பது மிகவும் முக்கியமான காலமாக கருதப்படுகிறது. இந்த காலகட்டங்களில் நாம் எந்த ஒரு சுப காரியங்கள் துவங்குவதையும் தவிர்க்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், இந்த அக்னி நட்சத்திர காலகட்டத்தில் நாம் இறை வழிபாடு செய்வதற்கு உகந்த காலமாக கருதப்படுகிறது.
அதிலும் குறிப்பாக சூரிய பகவான் மற்றும் முருங்கப்பெருமானை வழிபாடு செய்ய மிக உகந்த காலம் ஆகும். அப்படியாக, அக்னி நட்சத்திர காலகட்டங்களில் எந்த தெய்வத்தை வழிபாடு செய்யலாம் செய்ய கூடாது என்று பார்ப்போம்.
அக்னி நட்சத்திரம் தமிழகத்தின் மிகவும் முக்கியமான கால கட்டமாகும். 28 நாட்கள் கொண்ட இந்த அக்னி நட்சத்திர காலம் என்பது முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு மிகவும் உகந்த காலமாக இருக்கிறது.

மேலும் சூரிய பகவான் கிருத்திகை நட்சத்திரத்தில் அவருடைய பயணத்தை தொடங்கி பரணி நட்சத்திரம் நான்காம் பாதம் வரையிலான காலத்தையே அக்னி நட்சத்திர காலமாக குறிப்பிடுகின்றோம். இந்த காலத்தில் சூரிய பகவான் அவருடைய தேரை மிகவும் மெதுவாக நகர்த்தி செல்வதாக குறிப்பிடப்படுகிறது. ஆதலால் அக்னி நட்சத்திர காலகட்டங்களில் வெயிலின் தாக்கம் மிகவும் உக்கிரமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
அக்னி நட்சத்திரம் தேதி:
இந்த 2026 ஆம் ஆண்டுஅக்னி நட்சத்திரம் மே நான்காம் தேதி துவங்கி மே 28ஆம் தேதி வரை இருக்கிறது. இந்த காலகட்டங்களில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருத்தணி, பழனி, பழமுதிர்சோலை, சுவாமி மலை , திருச்செந்தூர் ஆகிய தலங்களுக்கு சென்று வழிபாடு செய்வது என்பது நமக்கு மிகச்சிறந்த பலனை கொடுக்கும்.
அக்னி நட்சத்திர காலங்களில் செய்யக்கூடாதவை:
1. முடிந்தவரை அக்னி நட்சத்திர காலங்களில் நாம் ஒருவருக்கு கடன் கொடுப்பதும் கடன் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும்.
2. அக்னி நட்சத்திர காலங்களில் திருமணம் போன்ற எந்த ஒரு சுபகாரிய நிகழ்ச்சிகளையும் தவிர்ப்பது நல்லது.
3. இந்த காலகட்டங்களில் நீண்ட தூர பயணம் கிரகப்பிரவேசம் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.
4. அதேபோல் விவசாயத்தில் விதை விதைப்பது புதிய வேளாண் பணிகளை துவங்குவதையும் தவிர்ப்பது நல்ல பலன்கள் கொடுக்கும்.

என்ன செய்யலாம்:
அக்னி நட்சத்திரம் காலகட்டம் என்பது வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதனால் நமக்கு உடல் ரீதியாக சில நோய்கள் வருவதற்கு வாய்ப்பு அதிகமாக இருப்பதால் அதிக அளவில் நாம் நீர்ச்சத்து கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். அதேபோல் அக்னி நட்சத்திர காலங்களில் பழனி போன்ற முருகன் ஆலயங்களுக்கு சென்று கிரிவலம் சென்று வழிபாடு செய்வது என்பது சிறந்த பலனை கொடுக்கும்.
காரணம் இந்த சமயத்தில் மலைகளில் இருக்கக்கூடிய மூலிகைகளின் காற்று நம் மீது விழும் பொழுது உடல் ஆரோக்கியத்தையும் மன அமைதியையும் கொடுக்கிறது. குறிப்பாக பெண்கள் முருகப்பெருமானுக்கு கதம்ப மலர்கள் கொண்டு கிரிவலம் செய்வது அவர்கள் நினைத்த காரியத்தை கைகூடி கொடுக்கும். மேலும் இந்த அக்னி நட்சத்திரம் காலங்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு மூலிகைகள் கலந்த தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யப்படும்.
இந்த தீர்த்தம் சேமித்து வைக்கப்பட்டு பிறகு அக்னி நட்சத்திரத்தின் நிறைவு நாளில் பக்தர்களுக்கு கொடுக்கப்படும். அதோடு இந்த தீர்த்தம் கோவில் முழுவதும் தெளிக்கப்படுகிறது. இந்த தீர்த்தத்தை நம்முடைய வீடுகளிலும் விவசாய செய்யும் இடங்களிலும் தெளிப்பதால் தீமைகள் விலகி நன்மைகள் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |