2026 புத்தாண்டு சிறப்பு ராசி பலன்(01-01-2026)

Report

 மேஷம்:

இன்று உங்கள் மனதில் எதிர்காலத்தை பற்றிய பயம் விலகும். குடும்பத்துடன் பொழுது போக்கு விஷயங்களில் கலந்து கொள்வீர்கள். உணவு விஷயங்களில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும்.

ரிஷபம்:

குடும்பத்தில் தேவை இல்லாமல் எதையும் பேசி வாக்கு வாதங்கள் வளர்க்காதீர்கள். கோயில் வழிபாடுகளில் பங்கு கொள்வீர்கள். வாழ்க்கை துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

மிதுனம்:

இன்று குடும்பத்துடன் சேர்ந்து முக்கியமான முடிவுகளை ஆலோசனை செய்யும் நாள். தந்தை உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். எதிர்பாராத நபரிடம் இருந்து எதிர்பாராத செய்தி வந்து சேரலாம்.

கடகம்:

மனதில் எதையும் சமாளித்து விடலாம் என்ற தைரியம் பிறக்கும். மதியம் மேல் உறவினர்களை சந்தித்து மகிழ்ச்சியான நேரம் செலவு செய்வீர்கள். குழந்தைகள் ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம்.

2026: 12 ராசிகளும் எடுக்கவேண்டிய முக்கிய தீர்மானங்கள் என்ன?

2026: 12 ராசிகளும் எடுக்கவேண்டிய முக்கிய தீர்மானங்கள் என்ன?

சிம்மம்:

இன்று நபர்களுடன் வெளியே செல்லும் பொழுது கவனம் வேண்டும். முடிந்த வரை ஆடம்பர செலவுகள் குறைத்து கொள்ளுங்கள். மனதிற்கு பிடித்த விஷயங்கள் செய்து மகிழ்வீர்கள்.

கன்னி:

திருமணம் தொடர்பான விஷயங்களை பற்றி ஆலோசனை செய்வீர்கள். நெருங்கியவர்களின் முழு ஆதரவு கிடைக்கும் நாள். மதியம் மேல் தலை வலி போன்ற ஆரோக்கிய குறைபாடு வரலாம்.

துலாம்:

எதிர்பாராத நபரிடம் பரிசுகளை பெறுவீர்கள். மனதில் தெய்வ சிந்தனை அதிகரிக்கும். மனதில் வீண் குழப்பங்கள் தவிர்த்து விடுங்கள். வேலையில் சிலருக்கு அழுத்தம் வரலாம்.

விருச்சிகம்:

மனதில் இனம் புரியாத குழப்பம் பயம் வரலாம். பள்ளி நட்புகளை சந்திக்கும் வாய்ப்புகள் கிடைக்கலாம். வண்டி வாகனத்தில் செல்லும் பொழுது மிகுந்த கவனம் வேண்டும்.

2026: புத்தாண்டு முதல் நாள் சிறப்பாக அமைய சொல்ல வேண்டிய மந்திரங்கள்

2026: புத்தாண்டு முதல் நாள் சிறப்பாக அமைய சொல்ல வேண்டிய மந்திரங்கள்

தனுசு:

குழந்தைகளுக்காக நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்கும் நாள். வாழ்க்கை துணையுடன் நல்ல அன்பு மலரும். ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் தோன்றி மறையும் நாள்.

மகரம்:

இன்று புதிய நட்புகள் கிடைக்கும் நாள். சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் வரலாம். முடிந்த வரை நிதானமாக செயல்படுங்கள். சிலரின் திறமை வெளிப்படும் மகிழ்ச்சியான நாள்.

கும்பம்:

பெற்றோர்களிடம் தேவை இல்லாமல் சண்டை போடாதீர்கள். உங்களுக்கு முகம் தெரியாத நபரிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். எதையும் பல முறை யோசித்து பிறகு செய்யுங்கள்.

மீனம்:

இன்று வாழ்க்கை தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிலருக்கு இறைவழிபாட்டில் மனம் செல்லும். குடும்பத்தின் பெரியவர்களின் முழு ஆசீர்வாதம் பெறுவீர்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US