2026: ஆடி முதல் வெள்ளி அன்று குலதெய்வம் அருளும் பெற செய்யவேண்டிய வழிபாடு
தமிழ் மாதங்களில் ஆடி மாதம் மிகவும் முக்கியமான மாதமாக இருக்கிறது. இந்த மாதம் அம்மன் வழிபாடு செய்வதும் குலதெய்வத்தின் முழு அருள் பெறுவதற்கும் சிறந்த மாதமாகும். அதேபோல், நம்முடைய முன்னோர்களின் அருள் ஆசியை பெறவும் இந்த மாதம் மிகவும் உகந்த மாதம்.
இந்த ஆண்டு ஆடி முதல் நாள் வெள்ளிக்கிழமை வருவது இன்னும் கூடுதல் சிறப்பை பெறுகிறது. அப்படியாக, இந்த நாளில் குலதெய்வம் அருள் வீட்டில் நிலைத்து நிற்க செய்ய வேண்டிய வழிபாடு பற்றி பார்ப்போம்.

வீட்டில் செய்ய வேண்டிய வழிபாடு :
ஆடி முதல் நாள் வெள்ளிக்கிழமை அன்று செம்பு அல்லது பித்தளை மண் கலசம் வெள்ளி செம்பினை எடுத்துக்கொண்டு அதற்கு மஞ்சள், குங்குமம் வைத்து அதில் தண்ணீர் நிரப்பி பிறகு மாவிலை மற்றும் சிறிது வேப்பிலை மஞ்சள் தூள், எலுமிச்சை ஒரு ரூபாய் நாணயம் சிறிது பச்சை கற்பூரம் ஆகியவற்ற இந்த தண்ணீரில் சேர்த்து பூஜை அறையில் வைத்து விட வேண்டும்.
இந்த கலசத்தை அம்பாளாக பாவித்து அதற்கு கற்பூர ஆரத்தி காட்டி வழிபாடு செய்ய வேண்டும். இவ்வாறு வழிபாடு செய்யும்பொழுது குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுப காரிய தடையும், குழந்தை பாக்கியம் திருமணம் விரைவில் நடக்கக்கூடிய யோகம் நமக்கு அம்மனின் பரிபூரண அருளால் கிடைக்கும்,
வழிபாட்டிற்கான நல்ல நேரம் :
காலை 04.30 - 05.30காலை 06.00 - 07.00காலை 09.00 - 10.20பகல் 01.00 - 02.00 இந்த நேரங்களில் நமக்கு வசதியான நேரம் ஒன்றில் இந்த வழிபாட்டை செய்யலாம். ஆடி முதல் நாள் மட்டுமின்றி ஆடி மாதம் முழுவதும் இந்த வழிபாட்டினை மேற்கொள்வது சிறப்பு.
பிறகு வாரத்திற்கு ஒரு முறை கலசத்தில் உள்ள தண்ணீரை வீடு முழுவதும் தெளித்து மீதமுள்ள தண்ணீரை கால் படாத இடத்தில் ஊற்றி விட்டு புதிதாக தண்ணீர் நிரப்பி அதற்குள் மற்ற பொருட்களை சேர்த்து வழிபாடு செய்யலாம்.

ஆடி வெள்ளி வழிபாடு :
ஆடி மாதம் வெள்ளிக்கிழமை வருவதால் இந்த நாளில் ராகு காலத்தில் துர்க்கை அம்மன் வழிபாடு செய்வது மிக சிறந்த பலனை பெற்றுக் கொடுக்கும்.
துர்க்கை அம்மனுக்கு செவ்வரளி மலர்கள் சாற்றி அர்ச்சனை செய்து வழிபாடு செய்யலாம். எலுமிச்சை பல விளக்கேற்றி ராகு காலத்தில் வழிபாடு செய்வதால் நமக்கு துன்பங்கள் எதிரிகள் தொல்லையாகும்.
ஆடி மாதத்தில் ஒவ்வொரு நாளும் வீடுகளில் தினமும் விளக்கேற்றி அபிராமி அந்தாதி பாடல் பாடி வருவது நம்முடைய குடும்பத்தில் செல்வ செழிப்பையும், மன அமைதியையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
தினமும் படிக்க முடியாதவர்கள் கட்டாயம் ஆடி செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் படிப்பது நல்ல பலன் கொடுக்கும். இந்த ஆடி மாதம் அம்மனுக்கு சர்க்கரை பொங்கல், கூழ், ஆக இவற்றை நெய்வேத்தியமாக படைத்து வழிபாடு செய்யலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |