138 நாட்கள் நடக்கும் சனியின் வக்ர பெயர்ச்சி.. 3 ராசிகளுக்கு தங்க நகை யோகம் உண்டாகுமாம்
நவக்கிரகங்களில் நீதிமானாக இருக்கக்கூடியவர் சனி பகவான். இவர் 2026 ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி மீன ராசியில் வக்ர பெயர்ச்சி அடைகிறார். மேலும் சனியன் இந்த வக்ர பெயர்ச்சியானது 12 ராசிகளுக்கும் நிச்சயம் பெரிய அளவில் தாக்கத்தை உண்டு செய்யும்.
டிசம்பர் 11, 2026 ஆம் தேதி வரை சனி இதே நிலையில்தான் பயணம் செய்யப் போகிறார். ஒட்டுமொத்தமாக சனியினுடைய பயணம் ஆனது 138 நாட்கள் வக்ர நிலையில் இருப்பதால் ஒரு சில ராசிகளுக்கு பண மழையும், செல்வ செழிப்பும், குதிக்க போகிறார்கள். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசியினருக்கு சனி பகவானுடைய இந்த வக்ரப் பெயர்ச்சியானது இவர்களுக்கு தொழில் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய அளவில் ஏற்றத்தை கொடுக்கப் போகிறது. புதிய தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு நல்ல அற்புதமான வாய்ப்புகள் உருவாகும். ஒரு சிலர் புதிய வீடு, நிலம் வாங்குவதில் அவர்களுடைய பணத்தை முதலீடு செய்யப் போகிறார்கள்.
கடகம்:
கடக ராசியினருக்கு சனிபகவானுடைய இந்த வக்ர பெயர்ச்சியானது இவர்களுக்கு தொழில் ரீதியாக ஒரு புதிய வாய்ப்புகள் கொடுக்கப் போகிறது. குடும்பத்தில் நீண்ட நாட்களாக தொடர்ந்திருந்த பண பிரச்சினைகள் விலகும். குடும்பத்தில் சுப காரிய நிகழ்வுகள் சிறப்பாக நினைத்தது போல் நடக்கும். வேலைக்காக திடீர் என்று வெளிநாடு பயணம் நினைத்தது போல் செல்ல நேரலாம். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். ஒரு சிலருக்கு தங்க நகைகள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும்.
மகரம்:
மகர ராசியினருக்கு சனி பகவானுடைய இந்த வக்ர பெயர்ச்சியானது குடும்பத்தில் இவர்களுக்கு ஒரு மிகப்பெரிய அளவில் நற்பெயரை சம்பாதித்து கொடுக்கப் போகிறது. இழந்த அந்தஸ்தை இவர்கள் மீண்டும் பெறப்போகிறார்கள். எதிர்பாராத விதமாக நகை வாங்கக் கூடிய யோகம் உருவாகும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கப்போகிறது. புதிய வண்டி வாகன மாற்ற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் நல்ல வாய்ப்புகள் உருவாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |