கஜலட்சுமி யோகம்: குரு பகவானின் அருளால் யோகம் பெரும் 3 ராசிகள்
ஜோதிட ரீதியாக ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட இடை வேளையில் அவர்களுடைய இடத்தை மாற்றுகிறார்கள். அந்த வகையில் சுக்கிர பகவான் ஒவ்வொரு மாதமும் தன்னுடைய இடத்தை மாற்றுகிறார். அந்த வகையில் ஜூன் எட்டாம் தேதிசுக்கிரன் கடக ராசிக்கு இடம் மாறுகிறார்.
கடக ராசியில் ஏற்கனவே குரு பகவான் 12 ஆண்டிற்கு பிறகு அவருடைய உச்ச வீட்டிற்கு வந்து இருக்கிறார். அந்த வகையில் ஜூலை நான்காம் தேதி வரி சுக்கிர பகவான் கடக ராசியில் இருப்பார். இதனால் ஒரு சில ராசிகளுக்கு தொழில் வளர்ச்சி, ஆடம்பரம், அழகு செல்வம் போன்றவை கிடைக்க இருக்கிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் இவர்களுக்கு பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் கிடைக்கின்றது. ஒரு சிலருக்கு நிலம், வண்டி வாகனம் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். அதேபோல் வருமானத்தில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். செய்யக்கூடிய காரியங்களில் வெற்றியும் முன்னேற்றமும் கிடைக்கும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் தொழில் ரீதியாக அவர்கள் நல்ல முன்னேற்றத்தை அடையப் போகிறார்கள். ஒரு சிலருக்கு நினைத்த இடங்களில் இருந்து பணம் வந்து சேரும். மாணவர்களின் கல்வி தொடர்பாக வெளிநாடு சென்று படிக்கக்கூடிய யோகம் கிடைக்கும். வீடுகளில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்கள் இந்த காலகட்டங்களில் அவர்களுக்கு உடல் ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். ஒரு சிலருக்கு நினைத்த இடத்தில் வேலை மாற்றம் கிடைக்கும். நினைத்த இடத்தில் இருந்து பண உதவிகள் பெறுவீர்கள். புதிய வீடு வாங்க கூடிய யோகம் உருவாகும். பத்திரம் போன்ற விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
