குரு நட்சத்திர பெயர்ச்சியால் தொட்டது எல்லாம் பொன்னாகும் யோகம் யாருக்கு?
நவகிரகங்களில் குரு பகவான் சுப கிரகமாக இருக்கிறார். இவருடைய நட்சத்திர மாற்றமானது 2026 புது வருடம் ஜூன் 18ஆம் தேதி வியாழக்கிழமை அன்று இரவு 9:32 மணிக்கு பூசம் நட்சத்திரல் நடக்கிறது.
இந்த நட்சத்திர மாற்றம் என்பது கட்டாயம் 12 ராசிகளுக்கும் 27 நட்சத்திரங்களுக்கும் ஒரு மிகப்பெரிய நன்மையான தாக்கத்தை உண்டு செய்ய போகிறது. அதிலும் குறிப்பாக மூன்று ராசிகள் ஒரு மிக உயர்ந்த அதிர்ஷ்ட பலன்களை பெறப் போகிறார்கள். அவர்கள் யார் என்று பார்ப்போம்.

[MRXTONV
கடகம்:
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு எல்லாம் சாதகமாக அமையக்கூடிய காலமாக இருக்குமாம். பொருளாதார ரீதியாக இவர்கள் சந்தித்த துன்பங்கள் எல்லாம் விலகி புதிய வேலை வாய்ப்புகள் இவர்களுக்கு தேடி வரப்போகிறது. சிலருக்கு புதிய தொழில் தொடங்கக்கூடிய ஒரு அற்புதமான கால அமைப்பு உண்டாகும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இடையே நல்ல ஆதரவு கிடைக்கும்.
கன்னி:
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் கன்னி ராசியினருக்கு ஒரு நல்ல அற்புதமான மாற்றத்தை வாழ்க்கையில் கொடுக்கப் போகிறது. இவர்களுக்கு திருமண பாக்கியம் கைக்கூடி வரப்போகிறது. நீண்ட நாட்களாக மனதில் இருந்த வருத்தங்கள் யாவும் விலகி மகிழ்ச்சி அதிகரிக்கும். இவர்களுடைய வாழ்க்கை துணையால் இவர்களுக்கு வாழ்க்கையின் மீது ஒரு நல்ல பிடிப்பு உருவாகும். சமுதாயத்தில் மதிப்பு உயரும்.
தனுசு:
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சியானது இந்த தனுசு ராசிக்கு மிகப்பெரிய பொற்காலமாகவே அமையப் போகிறது. தொழில் ரீதியாக இவர்கள் நிறைய புதிய அனுபவங்களையும் மாற்றங்களையும் பெற்று உயர்ந்த நிலைக்கு செல்ல போகிறார்கள். வாழ்க்கை துணையிடம் ஒரு நல்ல புரிதல் உண்டாகும். சிலருக்கு காதல் மலரக்கூடிய ஒரு அற்புதமான வாய்ப்பு உண்டு. திருமண தடை விலகி திருமணம் விரைவில் கைக்கூடும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |