2026 ஜூன்: குபேர யோகத்தை பெரும் முக்கிய ராசிகள் யார் ?

By Sakthi Raj Jun 07, 2026 12:02 PM GMT
Report

 1. மேஷம்- எதிர்பாராத வழிகளில் பண வரவு உண்டாகும். வியாபாரம் மற்றும் தொழில் ரீதியாக முடிவுகள் எடுக்கும் பொழுது மிகவும் கவனமாக இருப்பது நன்மை தரும். கடன் தொல்லை நீங்கும்.

2. ரிஷபம் - ரிஷபத்திற்கு குபேர யோகம் கூடி வருவதால் இவர்களுக்கு இந்த மாதம் தொட்டதெல்லாம் பொன்னாகும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளால் அடுத்த நிலை உயர்வை நோக்கி செல்வீர்கள்.

3. மிதுனம் - இந்த மாதம் நீங்கள் உங்களுடைய அறிவு திறனால் சில முக்கிய வாய்ப்புகளை பெறுவீர்கள். சொத்து சேர்க்கை நீண்ட நாள் கைகளுக்கு வரவேண்டிய பணம் வந்து சேரும்.

ஜூன் மாதத்தில் பிறந்த பெண்கள் ஏன் இவ்வளவு சிறப்பு வாய்ந்தவர்கள் தெரியுமா?

ஜூன் மாதத்தில் பிறந்த பெண்கள் ஏன் இவ்வளவு சிறப்பு வாய்ந்தவர்கள் தெரியுமா?

4. கடகம் - இவர்களுக்கு மறைமுக வழிகளில் இருந்து பணம் வந்து சேரும். சிறிய முயற்சியால் வியாபாரத்தில் பெரிய அளவில் முன்னேற்றத்தை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகும்.

5. சிம்மம் - சூரிய பகவானின் சுப பார்வையால் வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ரியல் எஸ்டேட் மற்றும் தொழிலில் செய்பவர்கள் மற்றும் சற்று கவனமாக இருந்தால் நன்மை உண்டாகும்.

6. கன்னி - கன்னி ராசியினருக்கு இந்த மாதம் பணம் வரவு சிறப்பாக இருக்கும். பெரிய அளவிலான முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. ஆடம்பர செலவுகளையும் தவிர்த்துக் கொண்டால் சேமிப்பு உயரும்.

2026 ஜூன்: குபேர யோகத்தை பெரும் முக்கிய ராசிகள் யார் ? | 2026 June Month 12 Zodiac Astrology Prediction

7. துலாம் - துலாம் ராசியினருக்கு இந்த மாதம் குபேர யோகம் உண்டாகும். இவர்கள் வாழ்க்கை அடுத்த கட்ட நிலையை நோக்கி செல்லப்போகிறது. எதிர்பார்த்து காத்திருந்த பூர்வீக சொத்துக்கள் கைகளுக்கு வந்து சேரும்.

8. விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் மற்றும் இந்த மாதத்தின் இரண்டாம் பகுதியில் குபேர யோகம் காத்திருக்கிறது. எதிர்பாராத பண வரவுகளால் நீண்ட நாட்கள் கடனில் இருந்து விடுபட போகிறீர்கள்.

9. தனுசு - இவர்களுக்கு குரு பகவானின் பரிபூரண அருள் இருப்பதால் தொட்ட காரியங்கள் எல்லாம் வெற்றியை தரும். ஷேர் மார்க்கெட் மற்றும் ரியல் எஸ்டேட் போன்றவற்றில் அதிர்ஷ்டத்தை பெறுவார்கள்.

பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர செய்யவேண்டிய எளிய சக்தி வாய்ந்த பரிகாரம்

பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர செய்யவேண்டிய எளிய சக்தி வாய்ந்த பரிகாரம்

10. மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் மிகப்பெரிய அளவில் பெரிய தொகை கைகளுக்கு வந்து சேரும். வியாபாரம் விரிவு படுத்துவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள்.

11. கும்பம் - ஜூன் மாதத்தில் கும்ப ராசியினருக்கு திடீர் தன லாபம் மற்றும் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. இருப்பினும் பணம் கொடுக்கல் வாங்கலில் இவர்கள் மிகுந்த கவனத்தோடு செயல்படுவது அவசியம்.

12. மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் பண வரவில் எந்த தடையும் இருக்காது. குடும்ப உறுப்பினர்கள் பெயரில் செய்யப்படும் முதலீடுகள் இந்த மாதம் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US