ஜூன் மாதத்தில் பிறந்த பெண்கள் ஏன் இவ்வளவு சிறப்பு வாய்ந்தவர்கள் தெரியுமா?
ஜோதிட கணக்கின்படி ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கும். அப்படியாக, ஜூன் மாதத்தில் பிறந்த பெண்களுடைய குண நலன்கள் அவர்களுடைய வாழ்க்கை முறைகள் எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.
பொதுவாகவே, ஜூன் மாதத்தில் பிறந்த பெண்கள் மிகவும் சுதந்திரமாக செயல்பட கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு கட்டுப்பாடு பிடிக்காத ஒன்று. இவரை கட்டுப்படுத்தி ஒரு இடத்தில் அமர வைக்க வேண்டும் என்றால் அந்த இடத்தில் அவர்கள் மிகப்பெரிய அளவில் ஒரு பிரச்சினையை உருவாக்கி விடுவார்கள்.
அந்த அளவிற்கு சுதந்திரமாக செயல்பட்டு தான் சாதிக்க வேண்டும் என்கின்ற எண்ணம் கொண்டவர்கள். அதேபோல் புதிதான விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் இருக்கும்.

அதேபோல் புதிய நண்பர்களிடம் பழகுவது போன்றவை இவர்களுக்கு இயல்பாக வரக்கூடிய ஒன்றாக இருந்தாலும் பழைய நட்புகளுடன் இவர்கள் எப்பொழுதும் ஒரு நல்ல பிணைப்பை கொண்டிருக்கிறார்கள்.
காதல் வாழ்க்கை என்று வரும் பொழுது இவர்கள் அந்த காதல் வாழ்க்கைக்கு தங்களை அர்ப்பணிக்க கூடியவர்களாக இருக்கிறார்கள். இருப்பினும், அந்த காதலில் எல்லை மீறி இவர்களுடைய சுதந்திரத்தை பறிக்கும் அளவிற்க்கு ஒரு விஷயம் நடக்கிறது என்றால் அது காதலை முறிப்பதற்கு இவர்கள் ஒரு நிமிடமும் யோசிப்பது இல்லை.
இவர்களுக்கு பிடித்தவர்களுக்காக இவர்கள் எதையும் செய்ய துணிவார்கள். குறுகிய நட்பு வட்டாரம் வைத்துக் கொண்டாலும் அவர்களுக்காக நிறைய நேரம் செலவிடுவதும் அவர்களுடைய நலனில் பங்கு கொள்வதும் போன்ற விஷயங்களை இவர்கள் செய்வார்கள். அதே போல் ஜூன் மாதத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் சுயதொழில் செய்வதற்கு விரும்புகிறார்கள்.

சுதந்திரமாக இருப்பதால் இவர்கள் ஒருவருக்கு கீழே வேலை பார்ப்பதை விரும்ப மாட்டார்கள். சமயங்களில் இவர்கள் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். சில நேரங்களில் நாம் சாதாரணமான வார்த்தையை பயன்படுத்தியிருந்தால் கூட அது அவர்கள் தவறாக புரிந்துக் கொள்வது உண்டு.
இவர்களிடம் நாம் நட்பாக இருக்கும் பொழுது இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இவர்கள்தான் நம்முடைய நெருங்கிய நண்பர்கள் என்பத்தை போல் நாம் பழகினால் மட்டும்தான் ஜூன் மாதத்தில் பிறந்தவர்களுடைய நட்பையும் அவர்களுடைய அன்பையும் நாம் முழுமையாக சம்பாதிக்க முடியும்.
மேலும், இவர்கள் வாழ்க்கையை எதார்த்தமாகவும் புரட்சிகரமாகவும் சிந்திக்க கூடியவர்கள். இவர்களுடைய சிந்தனையில் எப்பொழுதும் ஒரு புதுமை இழுக்கும். பிறர் மனம் காயப்படும் படி இவர்கள் எப்பொழுதும் நடந்து கொள்ள மாட்டார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |