ஏன் கோவில் கோபுரத்தை விட எந்த கட்டிடமும் உயரமாக இருக்கக் கூடாது தெரியுமா?

By Sakthi Raj Jun 06, 2026 10:47 AM GMT
Report

முற்காலங்களில் ஊர்களில் கோவில் கோபுரத்தை விட உயரமாக எந்த கட்டிடமும் நாம் பார்க்க முடியாது. அது மட்டும் அல்லாமல் எந்த கட்டிடமும் கோயில் கோபுரத்தை விட உயரமாக இருக்கக் கூடாது என்கின்ற ஒரு சட்டமும் இருந்தது.

இதற்குப் பின்னால் இருக்கக்கூடிய காரணம் என்னவென்று பார்ப்போம். நாம் கோவில்களில் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கக்கூடிய கலசங்களையும் பார்த்திருப்போம். ஆனால், அதற்கு பின்னால் ஒளிந்திருக்கக் கூடிய காரணங்கள் நமக்கு தெரிவதில்லை.

அதைவிட முக்கியமாக அதற்கு பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்து இருக்கிறது என்பதை நாம் பார்க்கத் தவறி விடுகிறோம். கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செம்பு மற்றும் ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கிறது.

ஏன் கோவில் கோபுரத்தை விட எந்த கட்டிடமும் உயரமாக இருக்கக் கூடாது தெரியுமா? | Why Temple Gopuram Is Taller Than Other Buildings

இந்த கலசங்களில் கொட்டப்படும் தானியங்களும் உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கக்கூடிய சக்தியை அந்த கலசங்களுக்கு தருகின்றன. அதில் நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள். குறிப்பாக அதில் வரகு தானியத்தை அதிகமாக சேர்த்தார்கள்.

இதற்கு பின்னால் இருக்கக்கூடிய காரணத்தை நாம் தெரிந்து கொண்டால் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்திகிறது. அதாவது விரகு மின்னலை தாங்க கூடிய அதி ஆற்றலை கொண்டிருக்கிறது. மேலும், 12 வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு நடைபெறும். அப்பொழுது அந்த கலசங்களில் இருக்கக்கூடிய பழைய தானியங்களை நீக்கிவிட்டு புதிய தானியங்களை கொண்டு நிரப்பப்படும்.

மிதுன ராசிக்காரர்களுக்கு கர்ம பலன்படி அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் ?

மிதுன ராசிக்காரர்களுக்கு கர்ம பலன்படி அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் ?

இதற்கு பின்னால் இருக்கக்கூடிய காரணம் நம்மை மீண்டும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. அந்த தானியங்களுக்கு 12 வருடங்களுக்கு தான் சக்தி இருக்கிறது. அதற்குப் பிறகு அது செயல் இழந்து விடுகிறது. இதை எவ்வாறு அந்த காலங்களில் அறிந்து கொண்டார்கள் என்கின்ற ஒரு கேள்வி நமக்கு எழும்.

இன்று மூன்று நாட்களில் மழை 3 மாதங்கள் பெய்தது போல் கொட்டி தீர்த்து விடுகிறது. ஆனால் அன்று தொடர்ந்து மூன்று மாதங்கள் மழை பெய்தது. அவ்வாறான காலகட்டங்களில் ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால் மீண்டும் அதை வைத்து பயிர் செய்தார்கள். இவ்வளவு உயரமான கோபுரத்தை நீரில் சுழ வாய்ப்பில்லை.

ஏன் கோவில் கோபுரத்தை விட எந்த கட்டிடமும் உயரமாக இருக்கக் கூடாது தெரியுமா? | Why Temple Gopuram Is Taller Than Other Buildings

கோயிலுக்கு செல்லும் பொழுது தவறியும் செய்யக்கூடாத 10 தவறுகள்

கோயிலுக்கு செல்லும் பொழுது தவறியும் செய்யக்கூடாத 10 தவறுகள்

பிறகு இதை கொண்டே மீண்டும் விதைக்கலாமே. அதோடு, எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் 'எர்த்' ஆகும். மேலும் அது எத்தனை நபர்களைக் காப்பாற்றும் என்பது அதனுடைய உயரத்தை பொருத்து அமைகிறது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள்.

உதாரணமாக கோபுரத்தின் உயரம் 50 மீட்டர் என்றால் 100 மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள். உதாரணமாக 750008 மீட்டர் பரப்பளவில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்.

அதிலும் சில கோவில்களில் நான்கு வாயில்கள் இருக்கின்றன . அது நாலாபுறமும் 75 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவை காத்து நிற்கிறது. தோராயமான கணக்குதான் இதைவிட உயரமான கோபுரங்கள் இதைவிட அதிகமான வேலைகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றனர். இதுவும் ஒரு காரணம் கோவில் இல்லா ஊர்களில் குடியிருக்க வேண்டாம் என்று சொன்னதற்கு.

அதனால் தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்றார்கள். உள்ளிருக்க கூடிய கடவுள் நம்மை எப்படி வாழ்க்கையில் காப்பாற்றுகிறார்களோ அதைப்போல் வெளியே தாங்கி நிற்கக்கூடிய கோபுரம் கடவுளை மட்டும் அல்லாமல் சுற்று இருக்கக்கூடிய மக்கள் அனைவருக்கும் கவசமாக இருந்து காக்கிறது.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US