2026 ஜூன் மாத பலன்: அதிர்ஷ்டத்தில் குதிக்க போகும் மீன ராசியினர்
ஜோதிடத்தில் ஜூன் மாதம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. காரணம் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் ஜூன் இரண்டாம் தேதி குரு பகவான் அவருடைய உச்ச வீடான கடக ராசிக்கு சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இடம் மாறி இருக்கிறார்.
அந்த வகையில் குரு பகவானுடைய சொந்த வீடான மீன ராசியினருக்கு ஜூன் மாதம் எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம்.
மீன ராசிக்கு ஜூன் மாதம் பொன்னான மாதமாகவே அமையப்போகிறது. ஐந்தாம் இடத்தில் குரு பகவான் உச்சம் பெறுவதால் இவர்களுக்கு இந்த காலகட்டங்களில் மிகச்சிறப்பான பலன்களை கொடுக்கப் போகிறார்.
புத்திர பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஒரு சிலருக்கு புதிய தொழில் தொடங்குவதற்கான வழி பிறக்கும். இவர்களுக்கு வேலையில் பதவி உயர்வுகள் கிடைக்கலாம். இருப்பினும் ஆறாம் இடத்து அதிபதி நான்காம் இடத்தில் இருப்பதால் வீண் வம்பு வழக்குகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்பதால் தேவையில்லாத வாக்குவாதம் செய்ய வேண்டாம்.
உங்களுடைய ரகசியங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாமல் பார்த்துக் கொள்வது அவசியம். மீன ராசியினர் உங்களுடைய வாழ்க்கை இன்னும் சிறப்பாக அமைய திருப்பதி வெங்கடாசலபதியை தரிசனம் செய்வது நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.
அதோடு சந்திரனுக்குரிய நாட்களாகிய 9, 10, 11, 24 ஆகிய தேதிகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இவர்கள் முத்துக்கள் அல்லது கனக புஷ்பராக மணி அணிவது சிறப்பு பலன்களை கொடுக்கும்.
மொத்தமாக ஜூன் மாதம் மீனராசியினருக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தையும் திருப்புமுனையையும் கொடுக்கக்கூடிய மாதகமாகவே இருக்கிறது. கூடுதலாக மீன ராசியினருக்கு இந்த மாதம் என்னென்ன சிறப்புப் பலன்களை கொடுக்கப் போகிறது என்பதையும் விரிவாக இந்த காணொளியில் பார்த்த தெரிவித்துக் கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |