இன்றைய ராசி பலன் (02-06-2026)

Report

மேஷம்:

இன்று உங்களுடைய வீடுகளில் சில குழப்பமான சூழ்நிலை உண்டாகும். நண்பர்களிடம் ஆலோசனையை பெறுவீர்கள். பொருளாதார நெருக்கடிகளால் மனக்கசப்புகள் ஏற்படலாம்.

ரிஷபம்:

இன்று வேலையில் நீங்கள் முழு கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தில் யாரைப் பற்றியும் தேவையில்லாத விமர்சனங்கள் செய்யாதீர்கள். இறை வழிபாட்டில் கலந்து கொள்வீர்கள்.

மிதுனம்:

இன்று குடும்பத்தில் பெரியவர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். எதிர்கால வாழ்க்கை பற்றிய பயம் உண்டாகும். வேலை தொடர்பாக வெளியூர் செல்ல நேரலாம். கவலைகள் மேலோங்கும்.

கடகம்:

இன்று நீங்கள் முக்கியமான நபர்களை சந்திப்பீர்கள். வியாபாரம் விரிவு படுத்துவதற்காக கேட்ட படம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபாடு செலுத்துவீர்கள்.

2026: நீங்கள் மகர ராசியினரா? உங்களுக்கு ஜூன் மாதம் எப்படி இருக்க போகிறது?

2026: நீங்கள் மகர ராசியினரா? உங்களுக்கு ஜூன் மாதம் எப்படி இருக்க போகிறது?

சிம்மம்:

தொழில் ரீதியாக சில குழப்பங்களை சந்திப்பீர்கள். இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்பதை பற்றி சிந்தனை தோன்றும். குடும்பத்தில் சில மன கசப்புகள் வரலாம்.

கன்னி:

உறவினர்களுடைய முக்கியமான விமர்சனங்களுக்கு ஆளாக கூடும். வேலை ரீதியாக பாராட்டுக்கள் கிடைக்கும். நீண்ட நாட்கள் மனதில் இருந்த பயம் விலகி மகிழ்ச்சி உண்டாகும்.

துலாம்:

வேலைப்பளு அதிகரிக்கும். முக்கியமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும். குடும்பத்துடன் கோபத்தை குறைத்துக் கொண்டு மனம் விட்டு பேசுவீர்கள்.

விருச்சிகம்:

உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். தந்தை வழி சொத்துக்கள் கைகளுக்கு வந்து சேரும். நன்மையான நாள்.

தனுசு:

இன்று நீங்கள் கடந்த கால தவறுகளை எண்ணி மனம் வருந்துவீர்கள். ஒரு சிலருக்கு சொந்த ஊர்களுக்கு பயணம் செய்யக்கூடிய வாய்ப்புகள் உருவாகும் சகோதரர்கள் ஆறுதலாக இருப்பார்கள்.

மகரம்:

உங்களுடைய உழைப்பிற்கும் திறமைக்கும் பெயர் கிடைக்கக்கூடிய நாள். எதிர்பார்த்த காரியங்கள் எதிர்பார்த்தது போல் நடக்கும். பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

வாழ்க்கையில் விசேஷ தர்மத்தை கடைபிடித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த 5 நபர்கள்

வாழ்க்கையில் விசேஷ தர்மத்தை கடைபிடித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த 5 நபர்கள்

கும்பம்:

தாய் உடல்நலையில் சற்று கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கை துணையுடன் தேவை இல்லாத வாக்குவாதம் செய்யாதீர்கள். கல்வியில் இருந்த தடைகள் விலகும்.

மீனம்:

இன்று மனதில் குழப்பமும் பயமும் உண்டாகும். ஒரு சிலருக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு ஏற்படும். எதிர்காலத்திற்கு தேவையான சில முக்கிய விஷயங்களை செய்து கொள்வீர்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US