2026 கார்த்திகை மாதப்பிறப்பு எப்பொழுது: முதல் நாள் செய்ய வேண்டிய வழிபாடு என்ன?

By Sakthi Raj Nov 12, 2026 09:41 AM GMT
Report

தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது கார்த்திகை மாதம். இந்த மாதத்தில் சிவபெருமான், முருகப்பெருமான், துளசி மற்றும் பெருமாளை வழிபாடு செய்வதற்கு மிக உகந்த மாதமாக கருதப்படுகிறது.

இந்த கார்த்திகை மாதத்தில் வீட்டு நிலை வாசல், பூஜை அறை மற்றும் துளசி மாடத்தில் காலை மாலை என அகல் விளக்கேற்றி வழிபாடு செய்வது என்பது சிறந்த பலன்களை பெற்றுக் கொடுக்கும் என்றும் இதனால் வீடுகளில் ஒரு மங்களமும் ஒளிமயமும் நிலவும் என்பது நம்பிக்கை.

2026 கார்த்திகை மாதப்பிறப்பு எப்பொழுது: முதல் நாள் செய்ய வேண்டிய வழிபாடு என்ன? | 2026 Karthigai Month Date And First Day Rituals

2026: கந்த சஷ்டி விரதம்.. முருகன் அருள் பெற தினமும் கேட்க வேண்டிய பாடல்.

2026: கந்த சஷ்டி விரதம்.. முருகன் அருள் பெற தினமும் கேட்க வேண்டிய பாடல்.

கார்த்திகை மாதப்பிறப்பு 2026:

அப்படியாக, 2026 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் நவம்பர் 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று பிறக்கிறது. அந்த காலகட்டங்களில் சூரிய பகவான் விருச்சிக ராசிக்குள் நுழைகிறார். அதுவே நாம் கார்த்திகை மாதம் கருதுகிறோம்.இந்த ஆண்டு கார்த்திகை மாதம் அஷ்டமி திதியும் திருவோணம் நட்சத்திரமும் இணைந்த நாளில் தொடங்குகிறது.

மாதப்பிறப்பன்று செய்ய வேண்டியவை:

கார்த்திகை மாத பிறப்பன்று பூஜை அறையிலும், துளசி மாடத்திலும் நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம். துளசி செடிக்கு நீர் ஊற்றி விளக்கேற்றி பெருமாள் நினைத்து மனதார வழிபாடு செய்யலாம்.

நெய்வேத்தியமாக கற்கண்டு அல்லது பால் படைத்து வழிபடலாம். கார்த்திகை மாத பிறப்பு செவ்வாய்க்கிழமை அன்று வருவதால் செவ்வாய்க்கு உகந்த தெய்வமான முருகப்பெருமான் ஆலயத்திற்கு சென்று அகல் விளக்கேற்றி "ஓம் சரவணபவ" என்று பாராயணம் செய்து வழிபாடு செய்யலாம்.

2026 கார்த்திகை மாதப்பிறப்பு எப்பொழுது: முதல் நாள் செய்ய வேண்டிய வழிபாடு என்ன? | 2026 Karthigai Month Date And First Day Rituals

உங்கள் லக்னமே உங்கள் குணத்தைச் சொல்லுமா? ஒவ்வொரு கிரகம் தரும் பலன்கள்

உங்கள் லக்னமே உங்கள் குணத்தைச் சொல்லுமா? ஒவ்வொரு கிரகம் தரும் பலன்கள்

அதே போல், பெருமாள் ஆலயங்களில் துளசி மாலை சாற்றியும் விஷ்ணு சகஸ்ரநாமம் அல்லது பெருமாள் ஸ்தோத்திரங்கள் பாராயணம் செய்வது நல்ல பலன் கொடுக்கும் என்பது நம்பிக்கை. கார்த்திகை மாதம் என்பதே தீபங்களை ஏற்றி வழிபடுவதற்கு மிக சிறப்பான மாதமாக இருக்கிறது.

திருக்கார்த்திகை தீபம், சோமவார விரதம், கார்த்திகை ஞாயிறு விரதம், ரமா ஏகாதசி போன்ற வழிபாடுகள் இந்த மாதத்தில் நடைபெற இருக்கிறது. மேலும், கார்த்திகை பௌர்ணமி அன்று முருகப்பெருமானுக்கு தீபம் ஏற்றி வழிபடுவதும் திருவண்ணாமலை கிரிவலம் சென்று வழிபாடு செய்வதும் மிகச் சிறப்பாக கருதப்படுகிறது.  

பொறுப்புத் துறப்பு:

இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள வழிபாடு மற்றும் விரத முறைகள் ஆன்மிக நம்பிக்கைகள், பாரம்பரிய நடைமுறைகளின் அடிப்படையில் பொதுத் தகவலுக்காக வழங்கப்பட்டுள்ளன. குடும்ப வழக்கம் மற்றும் கோயில் மரபுகளுக்கு ஏற்ப நடைமுறைகள் மாறுபடலாம். உடல் ஆரோக்கிய பிரச்சனை இருப்பவர்கள் விரதம் மேற்கொள்ளும் முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது சிறப்பு. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US