மகா கந்த சஷ்டி விரதம்: 6 நாட்களும் விரதம் இருக்க முடியாதவர்கள் என்ன செய்யலாம்?
முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு மிக உகந்த நாளாக எல்லா நாட்களும் இருந்தாலும் மகா கந்த சஷ்டி 6 நாட்கள் என்பது அதீத முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அப்படியாக, இந்த மகா கந்த சஷ்டி விரதம் நவம்பர் 10ஆம் தேதி துவங்கி சூரசம்ஹாரம் நவம்பர் 15 அன்றும், திருக்கல்யாணம் நவம்பர் 16 அன்றும் நடைபெறுகிறது.
மகா கந்த சஷ்டி்டி விரதத்தின் பொழுது நாம் என்ன செய்யலாம்? இதனுடைய சிறப்புகள் என்னவென்று நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் சிம்மம் ரங்கநாதன் அவர்கள். அதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
பொதுவாகவே, முருகப்பெருமான் வழிபாட்டை நாம் செவ்வாய்க்கிழமை தான் பெரும்பாலும் செய்வது உண்டு.

ஆனால், வெள்ளிக்கிழமை வழிபாடும் மிக உகந்ததாக சொல்லப்படுகிறது. அதோடு இந்த மகா கந்த சஷ்டி விரதம் என்பது முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்ததன் நினைவாக கடைபிடிக்கக் கூடிய ஆறு நாட்கள் விரதமாகும்.
இந்த ஆறு நாட்களும் பக்தர்கள் விரதம் இருந்து திருப்புகழ் பாராயணம் செய்து புனித நூல்களை வாசிப்பதன் வழியாக வெற்றியும் இறைவனுடைய அருளைப் பெறலாம்.
அதைவிட முக்கியமாக விரதம் இருக்கக்கூடிய ஒவ்வொருவரும் அவர்களுடைய உடல் நிலை, குடும்ப வழக்கத்திற்கு ஏற்ப வழிபாட்டு முறைகளை தேர்ந்தெடுத்து பக்தியுடனும் ஒழுக்கத்துடனும் விரதம் இருப்பது அவசியமாக இருக்கிறது.
அதோடு, மகா கந்த சஷ்டி விரதம் ஆறு நாட்களும் தொடர்ந்து இருக்க முடியாதவர்கள் கவலை கொள்ளாமல் சூரசம்ஹாரம் தினத்தன்று விரதம் இருக்கலாம். அந்த நாளில் மௌன விரதம் இருப்பதும் கூடுதல் சிறப்பை தருகிறது.
மேலும், மகா கந்த சஷ்டி விரதத்தை பற்றி பல்வேறு விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |