2026: மகாசிவராத்திரி நாளில் சதுர்கிரக யோகம்.. இந்த ராசிகள் அதிர்ஷ்டம் பெறுவது உறுதி
ஜோதிடத்தில் கிரகங்களுடைய ஒவ்வொரு நகர்வுகளும் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு மகா சிவராத்திரிக்கு முன்பாக பிப்ரவரி 13ஆம் தேதி அன்று சூரிய பகவான் கும்ப ராசியில் நுழைகிறார்.
அதனால் மகா சிவராத்திரி நாளில் கும்பராசியில் நான்கு கிரகங்களுடைய சேர்க்கை இருப்பதால் சதுர் கிரக யோகம் உருவாகிறது. இந்த யோகத்தின் தாக்கமானது கட்டாயம் ஒரு சிலர் ராசிகளுக்கு அவர்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றமும் சிவபெருமானுடைய அருளால் அதிர்ஷ்டமும் கிடைக்கப்பெபோகிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசியினருக்கு இந்த யோகமானது நீண்ட நாட்கள் கைகளுக்கு வராத பணத்தை கொண்டு வந்து சேர்க்க போகிறது. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் அமையும். இழந்த சமுதாய அந்தஸ்தை நீங்கள் மீண்டும் பெறுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் சக நண்பர்களின் உதவியால் ஒரு நல்ல மாற்றம் உண்டாகும். வியாபாரத்தில் முதலீடுகள் வழியாக லாபம் பெறுவீர்கள்.
மகரம்:
மகர ராசியினருக்கு நான்கு கிரக சேர்க்கையினால் பணப்பிரச்சினைகள் விரைவில் முடிவுக்கு வரப்போகிறது. நீதிமன்றத்தில் வழக்குகளில் இவர்கள் வெற்றி அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேலை நல்ல முடிவை பெறும். வாழ்க்கைத் துணையுடன் விட்டுக் கொடுத்து ஒரு நல்ல மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை பெறப்போகிறீர்கள். மனரீதியாக தெளிவு உண்டாகும்.
கன்னி:
கன்னி ராசியினருக்கு வருகின்ற மகா சிவராத்திரிக்கு மேல் வெற்றியும் அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு நல்ல திருப்பம் உண்டாகும். வீடு, வாகனம் வாங்கக்கூடிய யோகமும் அது வாங்க கூடிய அருளும் பெறுவீர்கள். வியாபார ரீதியாக புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகத்தால் நல்ல வளர்ச்சி அடைவீர்கள். சமுதாயத்தில் செல்வாக்கு உண்டாகும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் ஒரு நல்ல முடிவை பெறும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் பெறுவீர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |