2026: உருவாகும் முதல் மகாலட்சுமி ராஜயோகம்.. பண மழை யாருக்கு ?
2026 ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி செவ்வாய் மற்றும் சந்திர பகவான் உடைய சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாக இருக்கிறது. அதாவது இந்த ஆண்டில் உருவாக போகும் முதல் மகாலட்சுமி ராஜ யோகம். இது சுமார் 18 மாதங்களுக்கு பிறகு வரக்கூடிய யோகம் ஆகும். அப்படியாக இந்த யோகத்தினால் எந்த ராசியினர் மிகச்சிறந்த மாற்றத்தை பெற்று மகிழ்ச்சி ,செல்வம், தொழில் என்று எல்லாவற்றிலும் சிறந்து விளங்க போகிறார்கள் என்று பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசிக்கு இந்த யோகமானது நிச்சயம் அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு நல்ல தெளிவை கொடுக்க போகிறது. தொழில் ரீதியாக எடுக்கக்கூடிய முடிவுகள் எல்லாம் உங்களுக்கு சாதகமாக அமையப்போகிறது. பொருளாதார ரீதியாக கணவன் மனைவி இருவரும் சேர்ந்து ஒரு முக்கிய முடிவுகளை எடுக்கப் போகிறீர்கள். பிள்ளைகள் எதிர்காலத்திற்காக நீங்கள் ஒரு சில வங்கி சேமிப்புகளை தொடரக்கூடிய அற்புதமான மாதமாக இருக்கப் போகிறது.
ரிஷபம்:
ரிஷப ராசிக்கு இந்த யோகமானது இவர்களுக்கு வசதியான ஒரு வாய்ப்புகளை தேடி கொடுக்க போகிறது. ஒரு சிலருக்கு ஆடம்பரமான வாழ்க்கையை இந்த காலகட்டங்களில் வாழக்கூடிய அமைப்பை உண்டு செய்யும். புதிதாக வீடு வண்டி வாகனம் வாங்க வேண்டும் என்று முயற்சி செய்பவர்களுக்கு இந்த மாதம் நிச்சயம் அதற்கான ஒரு நல்ல பலன் கிடைக்கும். கடன் வாங்கி தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு கடனை அடைக்க கூடிய பாக்கியம் உண்டாகும்.
மகரம்:
மகர ராசியினருக்கு இந்த யோகமானது இவர்களுக்கு ஒரு புதிய தொடக்கத்தை கொடுக்கப் போகிறது. மனதில் புதிய சிந்தனை உருவாகும். அலுவலகத்தில் இவர்களுக்கு வேலை பளு குறைந்த முக்கிய பொறுப்புகள் இவர்களையே தேடி வரும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அரசு வழி வேலை செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய பொன்னான காலமாக இருக்கப்போகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |