பச்சை பட்டு உடுத்தி வந்த மீனாட்சியம்மன்.. பின்னால் இருக்கும் காரணங்கள்

Report

தமிழ்நாட்டு மட்டும் அல்லாமல் உலக அளவில் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த சித்திரைத் திருவிழாவிற்காக மதுரை மாநகரமே ஆவலுடன் காத்திருப்பார்கள். இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் வைபவம் ஏப்ரல் 28ஆம் தேதி நடைபெறும்.

அதைத்தொடர்ந்து அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளக்கூடிய அந்த நிகழ்வு மே ஒன்றாம் தேதி நடைபெறும் இன்று திருக்கல்யாணத்தில் மீனாட்சி அம்மன் உடுத்தக்கூடிய அந்த பட்டும் வைகை ஆற்றில் இறங்கும் போது கள்ளழகர் உடுத்தக்கூடிய பட்டும் சிறப்பு வாய்ந்தவை.

அந்த வகையில், இன்று மதுரையில் நடைபெற்ற மீனாட்சி திருக்கல்யாணத்தில் அன்னை மீனாட்சி அம்மன் பச்சை பட்டு உடுத்தி மணப்பெண்ணாக மேடைக்கு வந்து நின்றார். பொதுவாகவே, மீனாட்சியம்மனுக்கும் பச்சை நிறத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

பச்சை பட்டு உடுத்தி வந்த மீனாட்சியம்மன்.. பின்னால் இருக்கும் காரணங்கள் | 2026 Reason Of God Meenakshi Wearing Green Saree

அதாவது, மீனாட்சியம்மன் கோவிலில் பச்சை நிறத்தில் ஆன மரகத கல்லால் தான் மீனாட்சி சிலை செதுக்கப்பட்டிருக்கும். இன்னும் கூடுதலாக மீனாட்சியம்மன் கைகளில் பச்சை நிற கிலியும் பச்சை புடவையும் தான் உடுத்தி இருப்பார். இதற்கு பின்னால் ஒரு வரலாறு இருக்கிறது. அதாவது ஒரு காலத்தில் மதுரை மக்கள் மிகவும் வறட்சியால் துன்பப்பட்ட கொண்டிருந்தனர்.

சிவலிங்கத்தின் அடியில் சமாதி திகைக்க வைக்கும் குறிஞ்சிப்பாடி ஆலய வரலாறு

சிவலிங்கத்தின் அடியில் சமாதி திகைக்க வைக்கும் குறிஞ்சிப்பாடி ஆலய வரலாறு

அப்பொழுது அம்மன் பச்சை நிறத்தில் தோன்றி வளம், செழிப்பை அடையாளப்படுத்தியதாக கூறப்படுகிறது. அதோடு மீனாட்சி மற்றும் அழகர் ஆண்டுதோறும் அணியக்கூடிய உடைக்கு பின்னால் இருக்கக்கூடிய ஒரு காரணமும் சொல்லப்படுகிறது.

பச்சை பட்டு உடுத்தி வந்த மீனாட்சியம்மன்.. பின்னால் இருக்கும் காரணங்கள் | 2026 Reason Of God Meenakshi Wearing Green Saree

அப்படியாக இந்த ஆண்டு மீனாட்சி அம்மன் பச்சை பட்டில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பச்சை வண்ணம் செழிப்பு, வளம், பசுமையை குறிக்கிறது. அதனால் மீனாட்சி அம்மன் பச்சை பட்டு கட்டி வருவதால் நாடு செழிப்பாகவும் பசுமை நிறைந்ததாகவும் இருக்கும் என்பது ஐதீகம்.

அதேபோல், சிவப்பபட்டு அம்மன் கட்டி வந்தால் அந்த வருடம் அமைதியின்மை உருவாகலாம் என்று நம்பப்படுகிறது. இவ்வாறு அம்மன் கட்டக்கூடிய பட்டு நிறத்திற்கு பின்னால் ஒவ்வொரு காரணமும் இருப்பது குறிப்பிடத்தக்கது.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US