நாளைய ராசிபலன் (16-09-2026)

Report

மேஷம்:

இன்று காலை முதல் மனம் சற்று பதட்டமாகவே காணப்படும். கவன சிதறல்கள் வரலாம். வெளியூர் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

ரிஷபம்:

இன்று நீங்கள் சுற்றியுள்ளவர்களின் உண்மை முகத்தை புரிந்து கொள்வீர்கள். பல விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். சொந்தங்களால் ஏற்பட்ட மன குழப்பம் விலகும்.

மிதுனம்:

இன்று ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் மிகுந்த கவனத்தோடு இருப்பது அவசியம். சினிமா துறையில் இருப்பவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் தேடி வரும்.

கடகம்:

எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை திட்டமிட்டு செய்து கொள்வீர்கள். ஒரு சிலருக்கு குலதெய்வ வழிபாடுகளில் பங்கு கொள்ளக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.

மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு சொந்தத்திலேயே திருமணம் நடக்கக்கூடிய வாய்ப்பு உண்டு

மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு சொந்தத்திலேயே திருமணம் நடக்கக்கூடிய வாய்ப்பு உண்டு

சிம்மம்:

வெளிநாட்டு தொடர்பான விஷயங்களில் நீங்கள் கவனத்தோடு இருப்பது அவசியம். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வியாபாரத்தில் உள்ள தடை விலகும்.

கன்னி:

வாழ்க்கை துணை வழியே அனுசரித்து செல்வது அவசியம். தேவை இல்லாத விஷயங்களில் நீங்கள் தலையிடாதீர்கள். குடும்பத்தில் உங்களுடைய பொறுப்புகள் கொஞ்சம் அதிகரிக்கலாம்.

துலாம்:

இன்று காலை முதல் மனக்குழப்பம் உண்டாகும். இறைவழிபாட்டில் அதிக ஆர்வம் செலுத்துவீர்கள். வேலையில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.

விருச்சிகம்:

இன்று நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். சொந்தங்களால் ஏற்பட்ட மனக்கசப்புகள் விலகும். நீண்ட நாள் எதிர்பார்த்த காரியம் நிறைவேறும்.

தனுசு:

தாய் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். உடன் பிறந்தவர்களிடம் தேவையில்லாத வாக்குவாதம் செய்ய வேண்டாம். சந்தோஷமான செய்தி வந்து சேரும்.

ஏழரை சனியில் இருந்து முழு விடுதலை பெறும் கும்பம்... இனி ஜாக்பாட் அடிக்கும் காலம் தான்

ஏழரை சனியில் இருந்து முழு விடுதலை பெறும் கும்பம்... இனி ஜாக்பாட் அடிக்கும் காலம் தான்

மகரம்:

நீங்கள் எதிர்பார்த்த அரசாங்க விஷயங்கள் உங்களுக்கு கைக்கூடி வரும். நண்பர்களால் ஏற்பட்ட மனக்கசப்புகள் விலகும். வயிறு சம்பந்தமான விஷயங்களில் கவனம் வேண்டும்.

கும்பம்:

இன்று நீங்கள் எதையும் நிதானமாக யோசித்து செயல்படுவதால் மட்டுமே பிரச்சனைகளை தவிர்க்கலாம். யாரிடமும் அவசரப்பட்டு வாக்குறுதிகளை கொடுக்காதீர்கள்.

மீனம்:

இன்று கடன் வாங்குவதை தவிர்த்து விடுங்கள். உங்களைப் பற்றி நீங்கள் புரிந்து கொள்ளும் நாள். பிள்ளைகள் விஷயங்களில் முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு தள்ளப்படுவீர்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US