2026 தமிழ் புத்தாண்டு: அதிர்ஷ்டம் பெருக சித்திரை கனி காணுதல் சரியான முறை

By Sakthi Raj Apr 10, 2026 07:07 AM GMT
Report

நம்முடைய தமிழ் மாதத்தின் முதல் மாதமான சித்திரை மாதப்பிறப்பை தமிழ் புத்தாண்டாக கொண்டாடக்கின்றோம். அந்த வகையில் தமிழ் புத்தாண்டு 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வர உள்ளது. அந்த வகையில், விசுவாவசு ஆண்டு முடிந்து புதிய பராபவ வருடம் தொடங்குகிறது. பராபவ முதல் நாளில் சூரியன் கட்டத்தில் குருபகவான் சஞ்சரிக்கிறார்.

இந்த நாளில் சூரிய பகவானை வணங்கி வழிபாடு செய்வது என்பது நம் வாழ்க்கையில் சந்திக்கின்ற தடைகளை நீக்கி அதிர்ஷ்டத்தை தேடி கொடுக்கும். மேலும் தமிழ் வருடப்பிறப்பு அன்று நாம் சித்திரை கனி காணுதல் என்கின்ற ஒரு வழிபாடு மேற்கொள்வோம்.

2026 தமிழ் புத்தாண்டு: அதிர்ஷ்டம் பெருக சித்திரை கனி காணுதல் சரியான முறை | 2026 Sithirai Parabava Year Kani Kanuthal Festival

மகாலட்சுமி நம் வீடுகளில் நிரந்தரமாக தங்க பின்பற்ற வேண்டிய 8 குறிப்புகள்

மகாலட்சுமி நம் வீடுகளில் நிரந்தரமாக தங்க பின்பற்ற வேண்டிய 8 குறிப்புகள்

அதாவது பல ஊர்களில் தமிழ் புத்தாண்டு அன்று சித்திரை கனி காணும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். அதற்கு ஒரு தாம்பாளத்தில் மாம்பழம், வாழைப்பழம், பலாச்சுளை, காப்பு ஆரஞ்சு முதலான பழங்களை வரிசையாக வைப்பார்கள். பிறகு அதில் வெள்ளி, தங்கம், மஞ்சள், குங்குமம் பணம் கண்ணாடி ஆகியவை அடுக்கி வைப்பார்கள்.

இவ்வாறாக புத்தாண்டு அன்று கண் விழித்ததும் பூஜை அறையில் வைக்கப்பட்டிருக்கும் எந்த தாம்பாளத்தை தான் முதலில் அவர்கள் பார்க்க வேண்டும் என்பது ஐதீகம். இதில் இருக்கக்கூடிய கண்ணாடியில் முகம் பார்த்துவிட்டு பிறகு அதில் இருக்கக்கூடிய பழங்கள் படம் நகையை பார்க்க வேண்டும் என்பது வழக்கம்.

இவ்வாறு செய்கின்ற பொழுது அந்த புத்தாண்டு மகிழ்ச்சிகரமானதாகவும் செழிப்பாகவும் வீடுகளில் சுபகாரிய நிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கும் என்பது நம்பிக்கை. மேலும், வீடுகளில் தமிழ் புத்தாண்டு அன்று அறுசுவை உணவு பெற்றிருக்கும் உணவை சமைத்து படையல் இட்டு வழிபாடு செய்ய வேண்டும்.

2026 தமிழ் புத்தாண்டு: அதிர்ஷ்டம் பெருக சித்திரை கனி காணுதல் சரியான முறை | 2026 Sithirai Parabava Year Kani Kanuthal Festival

மனிதர்களுக்கு ஏழு பிறவிகள் இருப்பது என்பது உண்மையா?

மனிதர்களுக்கு ஏழு பிறவிகள் இருப்பது என்பது உண்மையா?

அதில் இனிப்பு கசப்பு, உப்பு, காரம் துவர்ப்பு புளிப்பு என ஆறு சுவைகளும் இருக்கக்கூடிய உணவுகளை சமைத்து பரிமாறிக் கொள்ள வேண்டும். பொதுவாக நாம் முக்கியமான நாட்களில் பாகற்காய் சேர்ப்பது இல்லை.

ஆனால் புத்தாண்டு அன்று எல்லா வகையான சுவைகளும் இடம் பெற்று உள்ள உணவுகளை படைப்பது விசேஷமாகும். குறிப்பாக மதிய உணவில் வேப்பம்பூ பச்சடி, மாங்காய் பச்சடி, பருப்பு வடை ,நீர்மோர் பாயாசம், மெதுவடை போன்றவை இடம்பெறுவது முக்கியமாகும்.

இதற்கு காரணம் நம்முடைய வாழ்க்கையில் இனிமை மட்டும் எதிர்பார்க்காமல் அறுசுவைகளை போல் இனிப்பு, கசப்பு என்று எல்லாம் கலந்தது தான் என்பதை உணர்த்தக் கூடியதாகவும் இவை எல்லாம் நாம் கடந்து செல்லக்கூடிய நிலையையும் அவை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US