2026 தமிழ் புத்தாண்டு: மேஷத்தில் உருவாகும் குபேர ராஜ யோகம்.. அதிர்ஷ்டம் யாருக்கு?
ஜோதிடத்தில் தலைமை கிரகமாக இருக்கக்கூடியவர் சூரியன். இவர் 30 நாட்கள் ஒருமுறை தனது ராசியை மாற்றுகிறார். அதாவது தமிழ் மாதம் ஒவ்வொரு மாதமும் சூரிய பகவான் தனது இடத்தை மாற்றுகிறார். அந்த வகையில் சூரிய பகவான் சித்தரை மாதம் ஜோதிடத்தில் முதல் ராசியான மேஷ ராசிக்கு இடம் மாறுகிறார்.
சூரிய பகவான் மேஷ ராசிக்குள் நுழையும் பொழுது மிகவும் மங்களகரமான குபேரராஜ யோகம் பிறக்கிறது. ஒரு சில ராசிகளுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செல்வமும் பெயர் புகழ் சேர இருப்பதாக சொல்கிறார்கள். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு முதல் வீடான லக்ன ஸ்தானத்தில் குபேர யோகம் உருவாக இருக்கிறது. இதனால் இவர்களுக்கு பல்வேறு வகையில் நன்மைகள் வர காத்திருக்கிறது.
ஏப்ரல் மாதம் முழுவதும் இவர்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றியை பெறப்போகிறது. மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். கடினமான உழைப்பால் மிகப்பெரிய அளவில் லாபத்தை தொழிலில் பெற போகிறார்கள்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு ஒன்பதாவது வீடான பாக்கியஸ்தானத்தில் குபேர யோகம் உருவாக இருக்கிறது. இது அதிர்ஷ்ட வீடு என்றும் ஜோதிடத்தில் அழைக்கப்படுகிறது. அதனால் சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கப் போகிறது. தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றியை பெற போகிறார்கள்.
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மனதில் இருக்கக்கூடிய எதிர்மறை எண்ணம் விலகி நேர்மறை எண்ணம் அதிகரிக்கும். எவ்வளவு பெரிய கடினமான சூழ்நிலையாக இருந்தாலும் சவால்கள் வந்தாலும் அதை சமாளிக்கக்கூடிய திறனை பெறுவார்கள்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு ஒன்பதாவது வீட்டில் குபேர ராஜயோகம் உருவாக இருக்கிறது. அதனால் இவர்களுக்கு திருமணம் மற்றும் தொழிலில் கூட்டாளிகளுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் விலகும்.
ஒரு சிலருக்கு நினைத்த இடத்தில் இருந்து திருமண வரன் அமையும். தொழில் ரீதியாக சந்தித்து வந்த தடைகள் நீங்கும். சமுதாயத்தில் உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் பெறுவீர்கள். வாழ்க்கையில் புதிய திருப்பங்களை பெறுவீர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |