2026 வைகாசி விசாகம் எப்பொழுது? அன்றைய தினம் இதை எல்லாம் செய்ய மறக்காதீங்க
வைகாசி விசாகம் தமிழ் கடவுள் முருகப்பெருமான் அவதரித்த தினமாக போற்றப்படுகிறது. மேலும், புராணங்களின் அடிப்படையில் வைகாசி மாதத்தில் வருகின்ற விசாக நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் இணைந்து வரக்கூடிய நாளில் தான் முருகப்பெருமான் சரவண பொய்கையில் அவதரித்தார் என்பது நம்பிக்கை.
அப்படியாக, வைகாசி விசாகம் என்று அனைத்து முருகன் கோவில்களிலும் மிகப்பெரிய அளவில் விழாக்கள் நடக்கும். அதில், ஏராளமான முருக பக்தர்கள் கலந்து கொண்டு இந்த நாளில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்து அவர்களுடைய நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கமாக கொண்டு உள்ளார்கள்.

மேலும், எல்லோராலும் வைகாசி விசாக தினத்தன்று கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபாடு செய்யக்கூடிய வாய்ப்பு கிடைத்ததில்லை. அவ்வாறு கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்று நீங்கள் வருந்தாமல் வீடுகளிலே இந்த ஒரு எளிய வழிபாட்டினை செய்தால் நிச்சயம் முருகப்பெருமானுடைய அருள் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.
அப்படியாக இந்த 2026 ஆம் ஆண்டு வைகாசி விசாகம் மே 30ஆம் தேதி சனிக்கிழமை அன்று வர இருக்கிறது.
வீட்டில் செய்ய வேண்டிய வழிபாடு :
வைகாசி விசாக தினத்தன்று அதிகாலை எழுந்து குளித்து வீடுகளில் முருகப்பெருமானின் விக்ரஹம் அல்லது வேல் இருந்தால் அதற்கு பால் அபிஷேகம் செய்து கொள்ள வேண்டும்.

பிறகு சாமிக்கு சந்தனம் பன்னீர் போன்ற குளிர்ச்சி தரும் பொருட்களைக் கொண்டு முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்ய வேண்டும். முடிந்தவர்கள் முருகப்பெருமானுக்கு சர்க்கரை பொங்கல் அல்லது பாயாசம் நெய்வேத்தியமாக படைத்து வழிபடலாம்.
மேலும் காலை மற்றும் மாலை இரண்டு நேரங்களிலும் பூஜை செய்து வழிபாடு செய்ய வேண்டும், இவ்வாறு வழிபாடு செய்தால் நிச்சயம் நீங்கள் கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபாடு செய்த முழுப்பலன் கிடைக்கும்.
அதுமட்டுமல்லாமல் நாளைய தினம் நீங்கள் கந்த குரு கவசம், கந்த சஷ்டி கவசம் போன்றவை பாராயணம் செய்வதும் வீடுகளில் பாடல்களை ஒலிக்க செய்வதும் நல்ல நேர்மறையான ஆற்றலை பெற்றுக் கொடுக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |