2026: ஜூலை மாதம் தூள் கிளப்பப்போகும் கன்னி ராசியினர்

By Sakthi Raj Jun 21, 2026 10:50 AM GMT
Report

 2026 ஆம் ஆண்டு கன்னி ராசியினருக்கு ஜூலை மாதம் எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம். இவர்களுக்கு பத்தாம் இடத்தில் புதன் ஆட்சி பெறுவதால் தொழிலில் இவர்கள் சிறந்து விளங்க போகிறார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் வருகை இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் லாபத்தை கொடுக்கப்போகிறது.

அலுவலகத்தில் இவர்கள் மிக சிறந்த பலன் பெறப்போகிறார்கள். வேலை செய்யும் இடங்களில் இவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரம் மற்றும் கணினி சார்ந்த வேலை மற்றும் வக்கீல் சொற்பொழிவாளர்களுக்கு இந்த மாதம் மிக அற்புதமான காலகட்டமாக அமையப் போகிறது.

ஒன்பதாமிடத்தில் செவ்வாய் பகவான் இருப்பதால் தந்தையுடைய ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் வேண்டும். 12ஆம் இடத்தில் சுக்கிர பகவான் இருப்பதால் தேவையில்லாத பண செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆதலால் சிக்கனத்தோடு செலவு செய்வது அவசியம்.

இந்த ராசிக்காரர்களுக்கு உடன் பிறந்தவர்களே எதிரியாக இருப்பார்களாம்? யார் தெரியுமா?

இந்த ராசிக்காரர்களுக்கு உடன் பிறந்தவர்களே எதிரியாக இருப்பார்களாம்? யார் தெரியுமா?

ஜூலை 27ஆம் தேதி முதல் 7ஆம் இடத்திற்கு சனி வக்கிரம் அடைவதால் வெளிநாடு செல்லக்கூடிய யோகமும் சொத்து சேர்க்கையும் உண்டாகும். 12 ஆம் இடத்திற்கு சுக்கிர பகவான் வருவதால் நீங்கள் கற்பனை உலகில் வாழ்வதை தவிர்க்க வேண்டும்.

வீட்டில் மன குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மன அமைதியை காப்பது அவசியம். கன்னி ராசிக்கு இந்த ஜூலை மாதம் சிறப்பாக இருந்தாலும் இவர்கள் மேலும் என்னென்ன விஷயங்களை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்பதை இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.   


ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US