2026: ஆடி மாதப்பிறப்பு எப்பொழுது? இந்த மாதத்தில் என்ன செய்யவேண்டும்? செய்யக்கூடாது
தமிழ் மாதங்களில் 12 மாதமும் மிகவும் முக்கியமான மாதமாக இருந்தாலும் அதில் வரக்கூடிய ஆடி மாதம் மிகவும் புனிதமான மற்றும் அம்மன் வழிபாட்டிற்கு உகந்த மாதமாக இருக்கிறது. இந்த ஆடி மாதத்தில் சூரிய பகவான் கடக ராசிகள் சஞ்சரிப்பார்.
அதனால், இந்த மாதத்தில் தெய்வீக ஆற்றல் அதிகம் நிறைந்திருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த ஆடி மாதத்தில் செய்யக்கூடிய வழிபாடு நம்முடைய குடும்பத்தை பல்வேறு தலைமுறை வரை காப்பாற்றும் என்பது நம்பிக்கை.
அதிலும், குறிப்பாக ஆடி வெள்ளிக்கிழமை ஒவ்வொரு அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும் செய்யப்படும். மாரியம்மன், காமாட்சியம்மன் மீனாட்சியம்மன், துர்க்கை அம்மன், காளியம்மன் போன்ற சக்தி தெய்வங்களுக்கு எலுமிச்சை மாலை, சிவப்பு மலர்கள், குங்குமம், மஞ்சள் ஆகிவற்றை சாற்றி பக்தர்கள் வழிபாடு மேற்கொள்வார்கள்.

இந்த மாதத்தில் பெண்கள் தங்களுடைய குடும்ப நலன் வேண்டியும் குழந்தை பாக்கியம் வேண்டியும் கடன் தீரவும் அம்மனை மனம் உருகி வழிபாடு செய்கிறார்கள். மேலும், ஆடி செவ்வாய் கிழமைகளும் துர்க்கை அம்மன் மற்றும் காளியம்மன் வழிபாட்டிற்கு உகந்ததாக இருக்கிறது.
இந்த நாளில் நாம் அம்மனை மனம் உருகி வழிபாடு செய்கின்ற பொழுது ஜாதகத்தில் இருக்கும் ராகு, கேது தோஷங்கள் மற்றும் நம்மை சுற்றி உள்ள தீய சக்திகள், கண் திருஷ்டி ஆகியவை விலகி மன தைரியம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
அதோடு ஆடி அமாவாசை முன்னிட்டு நாம் முன்னோர்களின் நினைத்து தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்வது என்பது நமக்கு முன்னோர்களுடைய முழு ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொடுக்கிறது. பித்ரு வழிபாடு செய்வதோடு அன்றைய தினம் அன்னதானம் செய்வது நன்மையை கொடுக்கும்.

ஆடி மாத சிறப்புகள் :
ஆன்மீக ரீதியாக ஆடி மாதத்தை நாம் தட்சிணாயன புண்ணிய காலத்தின் துவக்க மாதமாக கருதப்படுவதால் இது தேவர்களின் இரவு பொழுது துவங்கும் மாதமாக உள்ளது. அதனால் இந்த மாதத்தில் நாம் சுபகாரியங்கள் போது செய்யப்படும் பூஜைகள் ஆகியவற்றுக்கு தேவர்கள் வர மாட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.
ஆதலால், நம்முடைய நாம் செய்யும் சூப காரியங்களுக்கு இறைவனுடைய அருள் இருக்காது என்று சொல்கிறார்கள். அதனால் ஆடி மாதத்தில் சுப காரியங்கள் செய்வதை நாம் தவிர்ப்பது உண்டு.
ஆடி மாதம் 2026 :
இந்த 2026 ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி அன்று ஆடி மாதம் துவங்க இருக்கிறது. ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை அவை நீட்டிக்கிறது. மொத்தம் 32 நாட்கள் கொண்ட ஆடி மாதம் இந்த வருடம் வெள்ளிக்கிழமைகள் துவங்குவது கூடுதல் சிறப்பு பெறுகிறது.
ஒருவருக்கு நீண்ட நாட்களாக நினைத்த காரியங்கள் நடக்கவில்லை என்று நினைப்பவர்களும் குடும்பத்திற்காக குடும்ப நலன் வேண்டியும் இந்த ஆடி மாதத்தை பயன்படுத்தி வழிபாடு செய்தால் நிச்சயம் இறைவனுடைய அருளால் வாழ்க்கையில் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |