உங்கள் ஜாதகத்தில் 4 ஆம் வீட்டு அதிபதி எங்கு இருக்கிறார்.. உங்கள் வாழ்க்கை பலன் இதோ

By Sakthi Raj Jul 06, 2026 10:26 AM GMT
Report

 ஜோதிடத்தில் நான்காம் இடம் என்பது மிகவும் முக்கியமான இடமாக இருக்கிறது. இந்த இடம் தான் சுக ஸ்தானத்தை குறிக்கக்கூடிய இடம். அந்த வீட்டின் அதிபதி பல்வேறு இடங்களில் அமர்ந்திருக்கும் பொழுது ஜாதகருக்கு பல்வேறு விதமான பலன்கள் மாறுகிறது.

அப்படியாக, நான்காம் வீட்டு அதிபதி எந்த இடத்தில் அமர்ந்து இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம். இப்போது உங்களுடைய லக்னம் மேஷமாக இருக்கிறது என்றால் உங்களில் நான்காம் வீட்டு அதிபதி சந்திர பகவான். ஆக சந்திரன் உங்களுடைய ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து எந்த இடத்தில் அமர்ந்திருக்கிறார் என்பதை பொறுத்து பலன்கள் கிடைக்கிறது.

4-ஆம் அதிபதி அமரும் இடங்கள் மற்றும் பலன்கள்:

லக்னத்தில் : 

நான்காம் வீட்டு அதிபதி லக்னத்தில் அமர்ந்திருந்தால் அவர்களுக்கு நல்ல வீடு, வாகனம் போன்றவை அமையும். இவர்களுக்கு கலை ஆர்வம் மற்றும் சமூக சேவை மனப்பான்மை அதிகம் இருக்கும்.

2-ஆம் இடத்தில்: 

நான்காம் வீட்டு அதிபதி இந்த இரண்டாம் வீட்டில் அமையும் பொழுது இவர்களுக்கு தாய் வழியாக சொத்து வருமானம் வரும் ரியல் எஸ்டேட் மற்றும் உணவு சார்ந்த தொழில் இவர்களுக்கு நல்ல வெற்றியை கொடுக்கும்.

3-ஆம் இடத்தில்: 

இவர்களுக்கு இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் அல்லது வெளிநாட்டில் வசிக்கும் அமைப்பு உண்டாகும்.

4-ஆம் இடத்தில்:

 நான்காம் வீட்டு அதிபதி சொந்த வீட்டில் இருக்கும் பொழுது மிகப்பெரிய அளவில் பலத்தை கொடுக்கிறது. தாயார் நல்ல நிலையில் இருப்பார்கள். மிகப்பெரிய அதிகாரமிக்க பதவிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

உங்கள் ஜாதகத்தில் 4 ஆம் வீட்டு அதிபதி எங்கு இருக்கிறார்.. உங்கள் வாழ்க்கை பலன் இதோ | Where Is Your 4Th House Placed In Horoscope Palan

2026 ராகு பெயர்ச்சி: உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு வெற்றி பெறும் ராசிகள் யார்?

2026 ராகு பெயர்ச்சி: உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு வெற்றி பெறும் ராசிகள் யார்?

5-ஆம் இடத்தில்: 

இவர்களுக்கு குழந்தையின் வழியாக யோகம், பூர்வீக சொத்துக்கள் இவர்களுக்கு தேடி வரும்.

6-ஆம் இடத்தில்:

நான்காம் வீட்டு அதிபதி ஆறாம் இடத்தில் இருக்கும் பொழுது சற்று போராட்டமான வாழ்க்கையாக இருக்கும். தாயாரின் உடல் நிலையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

7-ஆம் இடத்தில்: 

நான்காம் வீட்டு அதிபதி ஏழாம் இடத்தில் அமரும்போது நல்ல வாழ்க்கை துணை கிடைக்கும். திருமணத்திற்கு பிறகு சொத்துக்கள் சேர்க்கை உண்டு.

8-ஆம் இடத்தில்: 

நான்காம் வீட்டு அதிபதி எட்டாம் வீட்டில் இருக்கும் பொழுது சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகள், திடீர் விபத்து போன்றவை ஏற்படலாம்.

 9 ஆம் இடத்தில்:

நான்காம் வீட்டு அதிபதி 9ஆம் இடத்தில் இருக்கின்ற பொழுது கல்வி, தந்தை வழி நல்ல ஆதரவு மற்றும் குருவின் அனுக்கிரகம் கிடைக்கும்.

10-ஆம் இடத்தில்: 

நான்காம் வீட்டு அதிபதி பத்தாம் இடத்தில் இருக்கின்ற பொழுது நல்ல பெயர், அரசு பதவி மற்றும் யோகமான வாழ்க்கை கிடைக்கும்.

பாம்பு கடித்தது போல் கனவு வந்தால் ஆபத்து வருமா? சாஸ்திரம் சொல்வதென்ன

பாம்பு கடித்தது போல் கனவு வந்தால் ஆபத்து வருமா? சாஸ்திரம் சொல்வதென்ன

11-ஆம் இடத்தில்:

 நான்காம் வீட்டு அதிபதி லாப ஸ்தானத்தில் அமர்கின்ற பொழுது நண்பர்களுடைய ஆதரவால் நல்ல பதவி வெற்றி வாய்ப்புகள் தேடி வரும்.

12-ஆம் இடத்தில்: 

நான்காம் வீட்டு அதிபதி 12ஆம் இடத்தில் அமரும்பொழுது சொந்த ஊரை விட்டு தூரத்தில் இருக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும் தாயாரின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் வேண்டும்.   

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US