கோவில் திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கறி விருந்து- எங்கு தெரியுமா?

By Sakthi Raj Mar 24, 2026 08:30 AM GMT
Report

ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கறி விருந்து விழா எங்கு தெரியுமா? திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வேட்டைக்காரன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆண்கள் மட்டுமே பங்கேற்க கூடிய கறி விருந்து விழா நடைபெற்றது. இந்த விழாவில் 50 ஆடுகள் பலியிடப்பட்டு சுமார் 100 கிலோ மூட்டை அரிசியில் சாதம் தயார் செய்து அன்னதானம் வழங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உலுப்பகுடியில் வேட்டைக்காரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 100 ஆண்டு காலமாக பங்குனி மாதத்தில் ஆண்கள் மட்டுமே பங்கு பெறக் கூடிய திருவிழா நடைபெற்று வருகிறது.

கோவில் திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கறி விருந்து- எங்கு தெரியுமா? | 2026Curry Feast Festival Attended By Men In Natham

2026: மேஷ ராசியினர் ஏப்ரல் மாதம் எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்?

2026: மேஷ ராசியினர் ஏப்ரல் மாதம் எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்?

இந்த திருவிழாவில் பெண் குழந்தைகள் முதல் வயதான மூதாட்டி வரை எந்த பெண்களும் பங்கு கொள்வதில்லை. விழாவில் ஆடுகள் நேர்த்திக்கடனாக கோவிலுக்கு வழங்கப்படுகிறது.

அப்படியாக இந்த 2026 ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி அன்று இரவு ஒரு மணிக்கு பக்தர்கள் பொங்கல் வைத்து அவர்களுடைய வழிபாட்டை துவங்கினார்கள். பின்னர் நேர்த்தி கடனாக செலுத்தப்பட்ட 50 ஆடுகள் பலியிடப்பட்டு சமைக்கப்பட்டது.

கன்னி ராசி ஆண்களை கணிக்கவே முடியாதாம்.. ஏன் தெரியுமா?

கன்னி ராசி ஆண்களை கணிக்கவே முடியாதாம்.. ஏன் தெரியுமா?

100 கிலோ மூட்டை அரிசிகளில் சாதம் தயார் செய்து இந்த கறி விருந்து நடைபெற்றது. இந்த நிகழ்வில் நத்தம் சுற்றி இருக்கக்கூடிய சுமார் 5,000 மேற்பட்ட ஆண்களுக்கு சாதமும் ஆட்டுக்கறி குழம்பும் பிரசாதமாக பரிமாறப்பட்டது.

நடந்த கறி விருந்து புண்ணாபட்டி, காட்டுவேலம்பட்டி, வேலாயுதம் பட்டி, முளையூர் நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆண்கள் கலந்து கொண்டனர். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US