மகாபாக்ய யோகத்தால் இரண்டு மடங்கு செல்வம் பெறப்போகும் ராசிகள்
ஜோதிட சாஸ்திரத்தில் ஒன்பது கிரகங்களும் தங்களுடைய இடத்தை குறிப்பிட்ட சில கால நிலையில் மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். அவ்வாறு கிரகங்கள் மாறக்கூடிய தாக்கமானது 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய அளவில் ஏற்படுத்தக் கூடும்.
அந்த வகையில் வருகின்ற மார்ச் 3 முதல் 26 ஆம் தேதி வரை சுக்கிர பகவான் லக்ன ராசியான மீனத்தில் சஞ்சரிக்கிறார். இந்த இடப்பெயர்ச்சியால் மகாபாக்ய யோகம் உருவாகிறது. இதனால் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் உண்டாகும் என்று நம்பப்படுகிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்கு இந்த காலகட்டத்தில் அவர்கள் வீடு, நிலம் வாங்கக்கூடிய யோகம் கிடைக்கப் போகிறது. திடீர் பணம் பெறக்கூடிய யோகம் உண்டாகும். காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு பெற்றோர்களுடைய சம்மதத்துடன் திருமணம் நடக்கக்கூடிய யோகம் உண்டு. நீங்கள் நினைத்த செய்தி உங்களை வந்து சேரும். வாழ்க்கை துணை உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் சமுதாயத்தில் மிகப்பெரிய அளவில் மதிப்பு உயர போகிறது. முக்கிய பிரபலங்களுடன் நெருங்கி பழகக்கூடிய யோகம் உருவாகும். தொழிலில் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு இந்த காலகட்டம் நல்ல வாய்ப்பு கிடைக்கப் போகிறது. திடீர் பணவரவால் மன மகிழ்ச்சி அடைவீர்கள்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டமானது நீண்ட நாட்கள் விற்காத நிலம் விற்கக்கூடிய யோகம் கிடைக்கப்போகிறது. ராஜ மரியாதையும் சமுதாயத்தில் உங்களுக்கான மதிப்பும் உயர் போகிறது. வேலையில் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை கொடுக்கப் போகிறார்கள். வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு நினைத்த இடத்தில் வேலை கிடைக்கும். பிள்ளைகள் வழியாக உங்களுக்கு பெருமை உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |