30 ஆண்டுகளுக்குப் பிறகு மேஷத்தில் சனி பெயர்ச்சி.. கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்
சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனிபகவான் மேஷ ராசியில் பெயர்ச்சி ஆகிறார். சனிபகவானின் பெயர்ச்சி ஒரு சில ராசிக்கு மிகப்பெரிய அளவில் அதிர்ஷ்டமான வாய்ப்புகளைத் தேடிக் கொடுக்கப் போகிறது.
அதாவது, 2027 ஆம் ஆண்டு மிக முக்கியமான சனி பெயர்ச்சி நடக்க உள்ளது. 2027 ஜூன் மூன்றாம் தேதி சனிபகவான் மேஷ ராசியில் பெயர்ச்சியாகிறார்.
இவர் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பிறகு மேஷ ராசியில் நடக்கக்கூடிய சனிப்பெயர்ச்சி ஆகும். இந்த சனி பெயர்ச்சி 12 ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் தாக்கத்தை கொடுக்கும்.
அந்த வகையில், எந்த ராசியினர் மிகப்பெரிய அளவில் முன்னேற்றத்தை பெறப்போகிறார்கள் என்று பார்ப்போம்.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சி இவர்களுக்கு மிகவும் சாதகமான பலனை கொடுக்கப் போகிறது. இந்த காலகட்டங்களில் இவர்களுக்கு புதிய வழி பிறக்கும். பொருளாதாரத்தில் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
பழைய முதலீடுகள் வழியாக நல்ல லாபத்தை பெறுவீர்கள். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு பொறுப்புகள் ஆகியவை தேடி வரும். தொழிலதிபர்களுக்கு இந்த காலகட்டங்களில் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போடக்கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்க போகிறது. இவர்களுக்கு விரும்பும் வேலை கிடைக்கும். பொருளாதாரம் நல்ல வலுப்பெறும். வருமானம் அதிகரிப்பதற்கான எல்லா வாய்ப்புகளும் தேடி வரும்.
குழந்தைகள் வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும்.போட்டி தேர்வுகளுக்கு தயாராக கூடிய மாணவர்கள் இந்த காலகட்டங்களில் வெற்றியடைவார்கள். அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் தேடி வரும்.
கும்பம்:
இந்த காலகட்டங்களில் இவர்களுக்கு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்கள் கிடைக்கும். நினைத்த காரியங்கள் கைகூடிவரும். சரியான திசையில் இவர்கள் செல்வதற்கான பாதை பிறக்கும்.
புதிய தொழில் தொடங்கவும் முயற்சிகள் எடுக்கவும் இவர்களுக்கு உகந்த காலமாக இருக்கிறது. வெளிநாடு செல்லக்கூடிய கனவுகள் இவர்களுக்கு நினைவாகும். உயர் கல்வியில் மாணவர்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி வாய்ப்புகள் பெறுவார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |