குரு பகவானின் செல்ல பிள்ளையாக இருக்கக் கூடிய 3 ராசிகள்.. யார் தெரியுமா?
ஜோதிடத்தில் குரு பகவான் மிகவும் முக்கியமான கிரகமாக இருக்கிறார். குருவின் பார்வை பட்டுவிட்டால் எந்த ஒரு பாவ கிரகமும் அதனுடைய செயலை இழக்கக்கூடும். அதுமட்டுமல்லாமல் குருபகவானுடைய பார்வை ஒருவருக்கு நல்ல நிலையில் அமைந்து விட்டால் அந்த ஜாதகருக்கு தொட்டதெல்லாம் வெற்றியாகவே அமையும்.
அந்த வகையில், 2026 ஆம் ஆண்டு குரு பெயர்ச்சி நடந்திருக்கிறது. 12 ஆண்டுகளுக்கு பிறகு குரு அவரின் உச்ச ராசிக்கு சென்று இருக்கிறார். அப்படியாக, குருபகவானுக்கு செல்ல பிள்ளைகளாக ஒரு சில ராசிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு எப்பொழுதும் குரு பகவானுடைய அருளும் ஆசீர்வாதமும் இருக்குமாம். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

கடகம்:
கடக வீட்டில் தான் குரு பகவான் உச்சம் அடைகிறார். ஆதலால், கடக ராசியினருக்கு எப்பொழுதும் குருபகவனுடைய ஆதரவு இருக்கும். இவர்களை குருபகவான் எந்த கஷ்டமான நிலையிலும் கைவிடாதவாறு பார்த்துக் கொள்கிறார்.
மேலும் இவர்களுக்கு குரு பகவானின் அருளால் அலுவலகத்தில் திடீர் என்ற உயர் பதவி சமுதாயத்தில் மதிப்பு போன்றவை கிடைக்கிறது. இவர்களுக்கு குழந்தைகள் வழியில் நல்ல பெயரும், குழந்தைகள் திறமைசாலியாகவும் இவர்களுக்கு கிடைக்கிறார்கள்.
தனுசு:
குருபகவான் உடைய சொந்த வீடான தனுசு ராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதுமட்டுமல்லாமல் இவர்கள் வாழ்க்கையை எளிதாகவும் எதுவும் கடந்து போகும் என்ற பக்குவத்தை பெற்றிருப்பார்கள்.
இவர்கள் எப்பொழுதும் குரு பகவானுடைய அருளால் எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழக்கூடிய நிலைமையை பெற்றிருப்பார்கள். இவர்களுக்கு குரு பகவானின் அருளால் சொத்துக்கள் சேர்க்கை, குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி போன்றவை கிடைக்கிறது.
மீனம்:
குரு பகவானுடைய சொந்த ராசியான மீன ராசியினருக்கு குரு பகவான் எப்பொழுதும் துணை நின்று துன்ப காலங்களில் அவர்களை பாதுகாத்து அருளுகிறார். ஆனா,ல் இவர்களுக்கு குரு பகவானால் ஆன்மீகத்திலும் அறிவிலும் சிறந்து விளங்குவார்கள்.
மேலும் இவர்களுக்கு எதிர்காலத்தில் நடக்கக்கூடிய விஷயங்களை முன்னதாகவே கணிக்க கூடிய தன்மை இருக்கும். எளிதில் ஒருவரை புரிந்து கொள்ளக்கூடிய ஆற்றலை பெற்றிருப்பார்கள். குரு பகவானுடைய அருளால் இவர்களுக்கு சமுதாயத்தில் உயர் அந்தஸ்தில் இருப்பவர்களுடைய நட்புகள் கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |