கடன் பிரச்சனை நீங்க வீட்டில் இந்த 3 பொருள் குறையாமல் இருக்கவேண்டும்
நாம் எவ்வளவுதான் பணம் சம்பாதித்தாலும் ஏதேனும் ஒரு சமயத்தில் கடன் வாங்கவேண்டிய நிலை ஏற்படும்.
அவ்வாறு பணப்பற்றாக்குறை ஏற்படாமல் வீட்டில் எப்போதும் செல்வம் குறைவில்லாமல் இருக்க வீட்டில் இந்த 3 பொருட்கள் கட்டாயம் தீராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
1. கல் உப்பு
பாற்கடலை கடையும்போது அதிலிருந்து அமிர்தம் வந்தது. அத்துடன் மகாலக்ஷ்மியும் வந்தார். அந்தக் கடலில் இருந்து கிடைக்கும் பொருள்தான் கல் உப்பு. இந்தக் கல் உப்பு மகாலக்ஷ்மியின் அம்சமாகவே கருதப்படுகிறது.
எக்காரணத்தைக் கொண்டும் கல் உப்பு வீட்டில் குறையவே கூடாது. அவ்வாறு கல் உப்பு ஒருவர் வீட்டில் குறைகிறது என்றால், பணச் சுமை, பணத்தட்டுப்பாடு ஏற்படப்போகிறது என்று அர்த்தம்.
2. அரிசி
வீட்டில் பச்சரிசியையோ அல்லது சாப்பாட்டிற்கு பயன்படுத்தும் அரிசியையோ குறைவில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அரிசி சந்திர பகவானின் அம்சமாகக் கருதப்படுகிறது.
அரிசி வீட்டில் தீர்ந்துவிட்டால், உடனேயே வாங்கி அதை நிரப்பி விட வேண்டும். அவ்வாறு குறைந்தால் கடன் பிரச்னை, குழப்பம் வந்து சேரும்.
3. துவரம் பருப்பு
துவரம் பருப்பு செவ்வாய் பகவானின் அம்சமாகக் கருதப்படுகிறது. செவ்வாய் பவானின் அருள் இருந்தால், வாங்கிய கடனை திருப்பி செலுத்தும் அளவிற்கு பணம் சேரும் என்று சொல்லப்படுகிறது.
சாஸ்திரத்தில் இந்த மூன்று பொருட்களையும் மிகவும் முக்கியமாகக் கருதுகிறார்கள். எனவே, வீட்டிலும் இந்த 3 பொருட்களையும் குறைவில்லாமல் வைத்துக்கொள்வது அவசியம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |