இந்த 3 ராசியில் பிறந்தவர்களுக்கு நல்ல நண்பர்கள் கிடைப்பது கஷ்டமாம்

By Sakthi Raj May 26, 2026 11:49 AM GMT
Report

பொதுவாக, ஒரு சிலர் எப்பொழுதும் கடினமான குணத்துடன் இருப்பார்கள். அவர்களிடம் நாம் அவ்வளவு எளிதாக அன்பாக மற்றும் நண்பர்களாக இருப்பது முடியாத காரியமாக இருக்கும்.

இவர்கள் எப்பொழுதும் ஒரு நல்ல நண்பர்கள் தேர்ந்தெடுப்பதிலும் அவர்களுக்கு நல்ல நண்பர் கிடைப்பதிலும் கஷ்டங்கள் அனுபவிக்கிறார்கள். அப்படியாக, ஜோதிட ரீதியாக எந்த ராசியில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் கிடைப்பதில் கஷ்டம் என்று பார்ப்போம்.

இந்த 3 ராசியில் பிறந்தவர்களுக்கு நல்ல நண்பர்கள் கிடைப்பது கஷ்டமாம் | 3 Zodiac Always Face Difficulties With Friendship

குரு பகவானின் அருளை பெற தினமும் செல்ல வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரங்கள்

குரு பகவானின் அருளை பெற தினமும் செல்ல வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரங்கள்

விருச்சிகம்:

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் சுயநலமாக சிந்திக்கக்கூடியவர்கள். அதுமட்டுமல்லாமல் இவர்கள் ஒருவர் மனதில் நினைக்கக்கூடியதை எளிதாக கண்டுபிடிக்க கூடிய தன்மை வாய்ந்தவர்கள்.

அதோடு இவர்கள் எப்பொழுதும் சந்தேக குணத்துடன் ஒருவர் மீது நம்பிக்கை வைப்பதில் அதிக அளவு தயக்கம் காட்டுகிறார்கள். இவர்களுக்கு நண்பர்கள் கிடைப்பதில் தாமதமும் நண்பர்கள் கிடைத்தால் அதில் ஒரு நல்ல இணைப்பும் இல்லாது சூழ்நிலையை நாம் பார்க்க முடிகிறது.

கன்னி:

கன்னி ராசியை பொருத்தவரை இவர்கள் அதிக அளவு கணக்கு வழக்கு பார்க்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். மேலும், இவர்கள் ஒருவர் மனம் காயப்படும் என்பதெல்லாம் கடந்து உடனடியாக விமர்சனம் செய்து விடுகிறார்கள்.

அதனால் கன்னி ராசியுடன் ஒருவர் நண்பராக பழகுவது என்பது கடினமாகவும் அவர்களுக்கு மனரீதியாக சில கசப்புகளை கொடுக்கக் கூடியதாகவும் அமைகிறது. மேலும், கன்னி ராசியினர் மிகுந்த பிடிவாத குணம் கொண்டவர்கள் என்பதால் இவர்கள் அவ்வளவு எளிதாக விட்டுக் கொடுத்து செல்ல மாட்டார்கள்.

2026 குரு பெயர்ச்சி 12 ராசிகள் செல்ல வேண்டிய குரு பரிகார ஆலயங்கள்

2026 குரு பெயர்ச்சி 12 ராசிகள் செல்ல வேண்டிய குரு பரிகார ஆலயங்கள்

மகரம்:

மகர ராசியை பொறுத்தவரை அவர்களுடைய லட்சியம்தான் மிகவும் முக்கியமாக இருக்கிறது. இவர்களுடைய வேலையை முடித்த பிறகு தான் ஒருவருடன் அவர்கள் நேரம் செலவிடுவதற்கு அவர்கள் முன் வருகிறார்கள்.

ஆதலால், நண்பர்களாக இருக்கட்டும் குடும்பங்களாக இருக்கட்டும் இவர்கள் ஒருவருடன் பழகும் பொழுது அவர்களுக்கான முக்கியத்துவம் கொடுக்காத சூழ்நிலையினால் இவர்களிடத்தில் அதிகமாக நண்பர்கள் வட்டாரம் இருப்பதில்லை. 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US