சுக்கிரனின் ராசி மாற்றம்-அதிர்ஷ்டத்தில் குதிக்க போகும் 3 ராசிகள் யார்?
ஜோதிடத்தின்படி இந்த முறை சுக்கிரன் நட்சத்திர மாற்றம் 17 ஜனவரி 2025 ஆம் ஆண்டு காலை 7.51 மணிக்கு பூர்வபத்ரபாத நட்சத்திரத்தில் நுழைய உள்ளது.மேலும் ஜனவரி 1ஆம் தேதி கும்பத்தில் சுக்கிரன் பெயர்ச்சி நடந்தது.அதன் பிறகு சுக்கிரன் இப்பொழுது மீன ராசியில் நுழைகிறார்.
அதாவது 29 ஜனவரி 2025 அன்று சுக்கிரன் மீன ராசியில் நுழைந்த பிறகு மே மாதம் வரை எந்த மாற்றமும் இருக்காது.அதோடு இந்த சுக்கிரன் பெயர்ச்சி எல்லா ராசிகளுக்கும் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும்.நாம் இப்பொழுது எந்த ராசி சுக்கிரன் பெயர்ச்சியால் அதிக அதிர்ஷ்ட வாய்ப்புகள் பெற போகிறார்கள் என்று பார்ப்போம்.
ரிஷபம்:
பூர்வபத்ரபாதம் நட்சத்திரத்தில் இந்த சுக்கிரன் பெயர்ச்சி ரிஷப ராசியினருக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் கொடுக்க உள்ளது.விலை உயர்ந் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.குடும்பத்துடன் நல்ல நேரம் செலவிட போகிறார்கள்.சிலருக்கு பெயரும் புகழும் வளரும்.எதிர்பாராத திசையில் இருந்து நன்மைகள் வந்து சேரும்.
மிதுனம்:
மிதுனத்திற்கு இந்த சுக்கிரனின் நட்சத்திர மாற்றம் மிக பெரிய தெளிவை கொடுக்க உள்ளது.தொழில் தொடங்க நல்ல நேரம் இது.அரசு அதிகாரிகளுக்கு பொற்காலம்.பல வகையில் உங்களுக்கு நல்லது நடக்கும்.கணவன் மனைவி இடையே நல்ல அன்யோன்யம் இருக்கும்.குடும்பத்துடன் வெளியூர் வெளிநாடு செல்லும் யோகம் உருவாகும்.
சிம்மம்:
சிம்ம ராசிகளுக்கு இந்த நட்சத்திர மாற்றம் உங்கள் மனைவி வழியில் இருந்து நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.சொந்தங்கள் உங்களை தேடி வரும் காலம் இது.உடல் ஆரோக்கியம் சீராகும்.குடும்பத்துடன் சுபநிகழ்ச்சிகள்,பொழுது போக்கு விஷயத்தில் கலந்து கொள்வீர்கள்.மார்ச் மாதம் வரை சுக்கிரன் அருளால் உங்களுக்கு வசந்த காலமாக அமையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |