சனி கொடுக்க எவர் தடுப்பார்- அதிர்ஷ்டம் எந்த ராசிகளுக்கு?
ஜோதிட சாஸ்திரத்தில் நவகிரகங்களில் மிக முக்கியமான கிரகமாக விளங்கக்கூடியவர் சனிபகவான். சனி பகவான் கிரகங்களில் மிகவும் சக்தி வாய்ந்தவராக இருக்கிறார். அப்படியாக சனி பகவான் இரு ராசியில் மற்றொரு ராசிக்கு செல்ல சுமார் 2 அரை ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறார்.
இவர் மனிதர்கள் செய்யும் கர்மா வினைகளுக்கு திரும்ப பதில் அளிக்கக்கூடியவர். அதனால், சனி பகவான் என்றால் எல்லோருக்கும் ஒருவித அச்சம் உண்டாகும். அப்படியாக, வருகின்ற மார்ச் 30ஆம் தேதி சனி பகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் இருந்து விலகி மீன ராசிக்கு செல்கிறார்.
மீன ராசி சொந்த ராசி ஆகும். இந்த மாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கு ஒரு வித மாற்றம் உருவாகும். இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மிக பெரிய அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.
ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இந்த சனி பெயர்ச்சி மிக பெரிய நல்ல மாற்றத்தை வாழ்க்கையில் கொடுக்க உள்ளது. இவர்கள் எதை செய்தாலும் அதில் காரிய வெற்றிகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் எல்லாம் உங்களை விட்டு விலகி செல்வார்கள். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும்.
கடகம்:
கடக ராசியில் சனி பகவான் ஒன்பதாம் வீட்டில் நுழைகிறார். இதனால் இவர்கள் வாழ்க்கையில் இவ்வளவு நாள் சந்தித்த துன்பங்கள் எல்லாம் விலகி சந்தோசம் பொங்க போகிறது. வாழ்க்கையில் சந்தித்த தடைகள் எல்லாம் படிப்படியாக விலகும். உங்கள் வேலைக்கு ஏற்ற பாராட்டுக்கள் கிடைக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் சனி பகவான் ஐந்தாம் வீட்டில் நுழைய போகிறார். இதனால் இவர்களுக்கு மிக பெரிய நன்மை காத்திருக்கிறது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குகள் முடிவு பெரும். காதல் மற்றும் திருமண வாழ்க்கை உங்களுக்கு சாதகமாகி அமையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |