இந்த 3 ராசிகளுக்கு விஷ்ணு பகவானின் அருளால் திடீர் அதிர்ஷ்டம் கிடைக்குமாம்
ஒவ்வொரு ராசிகளுக்கும் ஒவ்வொரு காரகத்துவம் இருக்கிறது. அப்படியாக, உலகத்தையே பாதுகாக்க கூடிய விஷ்ணு பகவானின் அருள் ஒரு சில ராசிகளுக்கு போலும் இருக்குமாம். ஜோதிடம் ரீதியாக எந்த ராசிகள் விஷ்ணு பகவானின் வழிபாடு செய்ய வேண்டும் என்பதைபற்றி பார்ப்போம்.
மீனம்:
மீன ராசியினருக்கு புதன் பகவான் பாதகாதிபதியாக இருக்கிறார். ஆதலால் இவர்கள் விஷ்ணு பகவானை வழிபாடு செய்வது சிறந்த பலனை கொடுக்கும். இவர்கள் பௌர்ணமி தினங்களில் சத்திய நாராயண பூஜை செய்வது மற்றும் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது சிறப்பான பலன்களை பெற்றுக் கொடுக்கும்.
தனுசு:
இவர்களுக்கு புதன் ஏழாம் அதிபதியாக இருப்பதால் இவர்களுக்கு திருமண வாழ்க்கையில் சில சிக்கல்களை கொடுக்கக்கூடும். சில நேரங்களில் திடீர் முடிவுகளால் சில பாதிப்புகளும் வரலாம். அதனால், இவர்கள் விஷ்ணு பகவானை வழிபாடு செய்வது மிகச் சிறந்த பலன்களைக் கொடுக்கும். இவர்கள் ஸ்ரீரங்கநாதரை சயனகோளத்தில் தரிசனம் செய்வது அல்லது ராம நாமத்தை ஜெபிப்பது நல்ல பலனை கொடுக்கும.
மகரம்:
புதன் பகவானால் ஏற்படும் கடன் பிரச்சினைகள் மற்றும் உத்தியோக மாற்றங்களை சமாளிப்பதற்கு இவர்கள் கும்பகோணத்தில் உள்ள உப்பிலியப்பரை வழிபாடு செய்வது சிறந்த பலன்களைப் பெற்றுக் கொடுக்கும். மேலும், இவர்கள் ராம நாமம் ஜெபிப்பது உலகில் இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் பெயரை பெற்று கொடுக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |