2026-ல் இந்த ராசிகளிடம் கவனமாக இருங்கள்.. ஆபத்து உறுதி
கடந்த சில வருடங்களாக கிரகங்கள் நிறைய ராசிகளுக்கு சாதகமான நிலையில் இல்லை. அதனால் அவர்கள் வாழ்க்கை போராட்டங்களை நிறைய சந்தித்து இருப்பார்கள்.
அந்த போராட்டம் காலங்களில் அவர்கள் மனம் துவண்டு இருந்தாலும் அவர்கள் இந்த 2026 ஆம் ஆண்டு புது வருடம் புதிய மனிதராக எழுந்து வந்ததோடு வலிமையான மனிதராக அவர்கள் கடின காலங்களில் இருந்து மீண்டு இருக்கிறார்கள். அப்படியாக எந்த ராசி மிகுந்த வலிமையோடு இந்த 2026 ஆம் ஆண்டு வாழப் போகிறார்கள் என்று பார்ப்போம்.

மேஷம்:
இவர்கள் கடந்த சில தினங்களாக நிறைய மன போராட்டங்களை சந்தித்து விட்டார்கள். தொழில், குடும்பம் என்று எதை எடுத்தாலும் இவர்களுக்கு சிக்கல் மட்டுமே இவர்களை சூழ்ந்து இருந்தது.
ஆனால் அதற்கெல்லாம் இவர்கள் துவண்டு போகாமல் சந்தித்த சிக்கலில் இருந்து இவர்களை இன்னும் எவ்வாறு மேன்மைப்படுத்திக் கொள்ள முடியும் என்ற ஈடுபாட்டில் இறங்கியதால் அந்த பாடங்களை எல்லாம் வைத்து இவர்கள் 2026 வருடத்தில் நிச்சயம் சிறப்பாகவும் வலிமையான ஒரு மனிதராகவும் வாழ போகிறார்கள்.
கன்னி:
நிறைய அவமானங்களை இவர்கள் சந்தித்து விட்டார்கள். இருப்பினும் துவண்டு போகாமல் மீண்டும் சாதிக்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்தால் இவர்களை தயார் படுத்தி இருக்கிறார்கள்.
அதனால் 2026 முழுவதும் இவர்கள் எந்த ஒரு சந்தேகமும் தாழ்வு மனப்பான்மையும் அவர்கள் மீது ஏற்படுத்திக் கொள்ளாமல் வருகின்ற வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி தங்களை குறைவாக மதித்து பேசக்கூடிய நபர்களுக்கு தக்க பதிலை கொடுக்க இவர்கள் காத்திருக்கிறார்கள். அதனால் இவர்களிடம் சென்று வம்பு வளர்ப்பவர்களுக்கு இவர்கள் அமைதியான பதிலை காட்டிலும் கடினமான பதிலை கொடுப்பதற்கு இந்த ஆண்டு காத்திருக்கிறார்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினரை கிரகங்கள் ஒரு இடத்தில் முடக்கி போட்டு விட்டது என்று தான் சொல்ல வேண்டும். திரும்பிய திசை எல்லாம் வாழ்க்கை இவர்களுக்கு துன்பத்தை கொடுத்து விட்டது. நிறைய இடங்களில் இவர்களை அறியாமல் இவர்கள் நிறைய தவறுகளும் செய்ய கிரகங்கள் தூண்டிவிட்டது.
இருப்பினும் அதற்கெல்லாம் இவர்கள் சலித்துக் கொள்ளாமல் தங்களுடைய தவறை திருத்திக் கொண்டும் ஒரு வலியான மனிதராக வலம் வருவதற்கு இவர்களை தயார்படுத்திக் கொண்டார்கள். அதனால் இந்த 2026 நிச்சயம் இவர்களுக்கு இவர்கள் யார் என்று காட்டக்கூடிய ஒரு ஆண்டாக அமையப் போகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |