2026-ல் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய முக்கியமான ராசிகள்
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு வருடமும் கிரகங்கள் அவர்களுடைய கால நிலைக்கேற்ப தங்களுடைய இடத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படியாக புதுவருடம் 2026 ஆம் ஆண்டு கிரகங்கள் இருக்கக்கூடிய நிலையானது 12 ராசிகளுக்கும் பல்வேறு விதமான தாக்கங்களை கொடுத்தாலும், இந்த கிரகம் மாற்றம் ஒரு சில ராசியினருக்கு ஒரு மிகப்பெரிய பாதிப்புகளும் கசப்புகளையும் கொடுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அப்படியாக 2026 ஆம் ஆண்டு மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் யார் என்பதை பற்றி பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசிக்கு ஓய்வின்றி உழைக்கக்கூடிய ஒரு நிலையை இந்த வருடம் கொடுக்கப் போகிறது. இவர்களுக்கு தொழில் ரீதியாக ஒரு சில மன அழுத்தங்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. அதை போல் குடும்ப வாழ்க்கையில் குழப்பம் உண்டாகும்.
தொழில் இடத்தை மாற்றுவதற்கான குழப்பம் மனதில் ஓடிக் கொண்டிருக்கும். நண்பர்களிடையே பகை உருவாகக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. ஆக இவர்கள் அமைதியாக தங்களுடைய கடமையை மட்டும் இந்த வருடம் செய்தார்கள் என்றால் வருகின்ற வருடத்தில் இவர்கள் நினைத்தது போல் மிகப்பெரிய உயரத்தை அடைந்து அடைந்துவிடலாம்.
கடகம்:
கடக ராசியினருக்கு இது 2026 ஆம் ஆண்டு குடும்ப ரீதியாக நிறைய பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார்கள். வாழ்க்கை துணையுடன் தேவையில்லாத மனக்குழப்பங்களும் மனவருத்தங்களும் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
பிள்ளைகளுடைய உடல் நிலையில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது பதட்டம் இல்லாமல் கவனமாக செல்வது அவசியம். முடிந்தவரை யாரிடமும் அதிக அளவில் கடன் வாங்குவதை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு இவர்கள் சிறிய விஷயங்களில் கவனம் செலுத்தினால் இந்த வருடம் மிகவும் நன்மையாக அமைந்துவிடும்.
துலாம்:
துலாம் ராசியினருக்கு இந்த 2026 ஆம் ஆண்டு குடும்ப வாழ்க்கையில் ஒரு சில பிரச்சனைகள் வரப்போகிறது. தொழில் ரீதியாக ஒரு நல்ல முடிவை எடுக்க முடியாத ஒரு நிலைக்கு தள்ளப் போகிறீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் கவனச் சிதறல் உண்டாகும். உடன் பிறந்தவர்களால் ஒரு சில மன கசப்புகள் வரும்.
பெற்றோர்களிடையே ஒரு நல்ல புரிதல் இல்லாத நிலை வரலாம். வேலைக்காக அடிக்கடி குடும்பத்தை விட்டு வெளியூர் பயணம் செல்லக்கூடிய நிலை உண்டாகும். ஆரோக்கியத்தில் சிறு சிறு குறைபாடுகள் வரும். முதுகு பிரச்சனை வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் கவனமாக இருப்பது அவசியம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |