நண்பர்களுக்காக எதையும் செய்யத் துணியும் 3 ராசியினர்.. யார் தெரியுமா?
இந்த உலகத்தில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் நம்முடன் பழகக்கூடிய உறவு என்றால் அது நட்புதான். இருப்பினும் சில நட்புகள் நமக்கு எப்பொழுதும் உண்மையாக இருப்பதில்லை. உண்மையாக இருக்கக்கூடிய நண்பர்கள் கிடைப்பது எல்லாம் வரம்.
அதாவது ஒரு வாசகம் சொல்வார்கள் "உன் நண்பனை காட்டு, நீ யார் என்று சொல்கிறேன்" என்று. அப்படியாக ஒரு நல்ல நண்பர் என்பது எல்லார் வாழ்க்கையில் மிகவும் அவசியமாக இருக்கிறார்கள். அந்த வகையில் ஒவ்வொரு ராசியின் அமைப்புகள் படி எந்த நண்பர்கள் தங்களுடைய நட்பிற்காக எதையும் செய்ய துணிபவர்கள் என்று பார்ப்போம்.

மீனம்:
மீன ராசியனரை பொறுத்தவரை இவர்கள் தங்களுடைய உறவுகளுக்கு கொடுக்கக்கூடிய அதே முக்கியத்துவத்தை நண்பர்களுக்கும் கொடுப்பார்கள். நண்பர்களுக்காக இவர்கள் எதையும் எந்த காலகட்டத்திலையும் செய்யத் துணிவார்கள். நண்பர்கள் மட்டுமல்லாமல் நண்பர்களுடைய குடும்பத்தினர்களுக்கும் இவர்கள் முன் நின்று உதவி செய்யக்கூடிய அற்புதமான ஆற்றல் இந்த மீன ராசியினருக்கு உண்டு.
விருச்சிகம்:
உறவுகள் இல்லாமல் கூட விருச்சிக ராசியினர் இருந்து விடுவார்கள். ஆனால் நண்பர்கள் வட்டம் இல்லாமல் இவர்களால் இருக்கவே முடியாது. நண்பர்களுக்காகவே வாழக்கூடியவர்கள் இந்த விருச்சிக ராசியினர். தங்களுடைய நண்பர்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் எந்த இரவு என்று பாராமல் அவர்களுக்காக ஓடி சென்று உதவ கூடிய ஒரு அற்புதமான மனப்பான்மை இவர்களுக்கு உண்டு. அதை போல் நண்பர்கள் இவர்களிடம் உரிமை எடுத்து அவர்களுக்காக எதையும் செய்வார்கள்.
மகரம்:
மகர ராசி பொருத்தவரை இவர்கள் எல்லோரிடத்திலும் தாங்கள் சரியாக நடந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த வகையில் மகர ராசியினருக்கு நட்பு வட்டாரம் என்பது பல்வேறு இடங்களில் இருக்கக்கூடியவர்கள். எந்த நேரத்தில் நட்புகள் தங்களுக்கு ஒரு உதவி என்று கேட்டாலும் இவர்கள் இருந்த இடத்திலிருந்து தங்களால் முடிந்த உதவிகளை செய்யக்கூடிய மனப்பான்மை கொண்டு இருப்பார்கள். எந்த ஒரு விஷயம் என்றாலும் நட்புகளிடம் மறைக்காமல் செய்யக்கூடிய ஆற்றல் இவர்களுக்கு உண்டு.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |