தங்களை எப்பொழுதும் அழகாகவும் ஆடம்பரமாகவும் காட்டி கொள்ளும் 3 ராசிகள்
வாழ்க்கையில் தேவை என்பது சற்று அதிகம் ஆனால் அவை ஆடம்பரம் ஆகிறது. அந்த வகையில் ஒரு சிலருக்கு இயற்கையாகவே அவர்களின் ராசியின் அமைப்பை பொறுத்து அவர்கள் மிகவும் ஆடம்பரமாக வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணமும் சமுதாயத்தில் அவர்கள் தனித்துவமாக தெரிய வேண்டும் என்ற எண்ணமும் அதிகம் இருக்கும்.
அந்த வகையில் எந்த மூன்று ராசியினர் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் ஆடம்பரமாக வாழ வேண்டும் என்று இயற்கையிலே குணம் கொண்டிருப்பார்கள் என்பதை பற்றி பார்ப்போம்.
ரிஷபம்:
ரிஷப ராசியின் அதிபதி சுக்கிர பகவான். சுக்கிரன் தான் ஒருவருக்கு சுகபோக வாழ்க்கையை கொடுப்பவர். ஆக இவர்கள் இயற்கையாகவே செல்வாக்கு மற்றும் ஆடம்பரப் பொருட்கள் மீது அதிக ஆசை கொண்டிருப்பார்கள். இவர்கள் சமுதாயத்தில் தனக்கென்று ஒரு பெயரும் சமுதாயத்தில் பெரிய நபர்களுடைய நட்பை தான் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணமும் அதிகம் இருக்கும்.
சிம்மம்:
மிகவும் தலைமைத்துவ பண்பை கொண்ட சிம்ம ராசியினர் எப்பொழுதும் தான் ஒரு இடத்தில் முதன்மை வகிக்க வேண்டும் என்ற பண்பு கொண்டிருப்பார்கள். இவர்கள் மிகப்பெரிய அளவில் தங்களை சமுதாயத்தில் காட்டிக் கொள்ள வேண்டும் என்று விருப்பம் கொள்வார்கள். ஆதலால் இவர்கள் எப்பொழுதும் அதிக மதிப்புடைய பொருட்களை வாங்கி தங்களை அழகு படுத்துவதிலும் வசதியான நபர்களை போல் காட்டிக் கொள்வதிலும் பிரியம் கொண்டவர்கள்.
துலாம்:
துலாம் ராசியில் அதிபதி சுக்கிர பகவான். துலாம் ராசியினருக்கு இயற்கையாகவே கலைத்துறையின் மீது அதிக ஆர்வம் இருக்கும். மேலும் இவர்கள் தங்களை எப்பொழுதும் வெளியில் அழகாக காட்டிக் கொள்ள வேண்டும் என்று எண்ணுவார்கள். இவர்களுடைய தகுதியை மீறி சில நேரங்களில் இவர்கள் ஆசைப்படுவது உண்டு. இவர்கள் எப்பொழுதும் சாதாரண பொருட்கள் மீது பிரியம் கொள்ள மாட்டார்கள். ஆடம்பரமான பொருட்கள் மீது மட்டுமே இவர்களுடைய கவனம் செல்லும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







