ராகு கேது பெயர்ச்சி 2025:மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்
மீன ராசியில் இருந்து விலகும் ராகு 8 ஆண்டுகளுக்கு பிறகு கும்ப ராசியில் பயணம் செய்ய உள்ளார்.கும்ப ராசியை ஆளும் கிரகமாக சனி,இருக்கிறார்.
அப்படியாக,இந்த ஆண்டு மார்ச் 14 அன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஹோலி பண்டிகை முடிந்து 2 நாட்களுக்குப் பிறகு,மார்ச் 16 மாலை ராகு பகவான் பூர்வபாத்திரபாத நட்சத்திரத்திலும், கேது பகவான் உத்தரபல்குனி நட்சத்திரத்திலும் பிரவேசிக்கிறார்கள்.
இதனால் சில ராசிக்காரர்களுக்கு பிரச்சினைகள் அதிகரிக்கக்கூடும்.அந்த வகையில் ராகு கேது பெயர்ச்சியால் எந்த ராசியினர் மிக கவனமாக இருக்க வேண்டும் என்று பார்ப்போம்.
மேஷம்:
மேஷராசியினர் ராகு கேது பெயர்ச்சியால் வியாபாரத்தில் சில நிதி நெருக்கடிகளை சந்திக்கலாம்.ஒரு சிலர் குடும்பத்தில் எதிர்பாராத பிரச்சனையை சந்திக்கக்கூடும்.அளவிற்கு அதிகமாக கோபம் ஏற்பட வாய்ப்புள்ளது.அதை கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொள்வதால் வரும் பாதிப்புகளை தவிர்க்கலாம்.
கன்னி:
கன்னி ராசியினர் ராகு கேது பெயர்ச்சியால் பிறந்த வீட்டில் சில சவால்களை சந்திக்க நேரிடும்.திருமண வாழ்வில் கருத்து வேறுபாடுகளால் கணவன் மனைவி பிரியும் சூழல் உருவாகும்.மன அமைதி குறைந்து பதட்டமாக காணப்படுவீர்கள்.வேலை பளு அதிகரிக்கும்.
மீனம்:
மீன ராசியினர் ராகு கேது பெயர்ச்சியால் அளவிற்கு அதிகமாக மன அழுத்தத்தை பெற வாய்ப்புள்ளது.இந்த காலகட்டத்தில் எந்த ஒரு முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.வண்டி வாகனத்தில் செல்லும் பொழுது மிகவும் கவனமாக செல்ல வேண்டும்.உடன் பணிபுரிபவர்களுடன் பிரச்சனை உருவாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |