இந்த ராசிக்காரர்கள் எப்பொழுதும் யாரையாவது குறை சொல்லிக் கொண்டே இருப்பார்களாம்
நம்முடைய நட்பு வட்டாரத்தில் ஒரு சிலரை பார்த்திருப்போம். எப்பொழுதும் யாரையாவது பற்றி குறை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அப்படி குறை சொல்லவில்லை என்றால் அவர்களுக்கு நிம்மதியாகவே இருக்காது.
இதற்கு அவர்களுடைய ராசி அமைப்பும் காரணமாக இருக்கிறதாது. அப்படியாக ஜோதிட ரீதியாக எந்த ராசியினர் எப்பொழுதும் யாரையாவது பற்றி குறை சொல்லிக் கொண்டே இருப்பார்கள் என்று பார்ப்போம்.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு எப்பொழுதும் தானே புத்திசாலியாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஆதலால் இவர்கள் ஒரு சிலரை குறை சொல்வதின் வழியாக இவர்கள் உயர்ந்தவராக காட்டிக் கொள்ள பல நேரங்களில் முயற்சிக்கிறார்கள். அதனால் இவர்கள் மனதை திருப்தி செய்வது என்பது கஷ்டமான காரியமாக இருக்கிறது.
கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் பொருத்தவரை தனக்கு தான் எல்லாம் தெரியும் தானே உயர்ந்தவர் என்ற ஒரு எண்ணம் அவர்களுக்கு எப்பொழுது இருந்து கொண்டே இருக்கும். அதனால் யாரேனும் இவர்கள் முன்பு ஒரு நல்ல நிலையில் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் அதை இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. ஆதலால் அந்த நபரை குறை சொல்லி கீழே தள்ளுவதற்கு நிறைய முயற்சி செய்வார்கள்.
மகரம்:
மகர ராசிக்காரர்கள் எப்பொழுதும் நேர்மையாகவும் சரியாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆதலால் இவர்கள் இடத்தில் சிறிதாக ஒரு தவறு செய்தால் கூட அதை அவர்கள் மிகப்பெரியதாக எடுத்துக்கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. மேலும், மகர ராசியினரை மகிழ்ச்சி படுத்துவது என்பது பல நேரங்களில் சிரமமான காரியமாகவே இருந்து வருகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |