வீட்டில் தெய்வீக சக்தி இருப்பதை உணர்த்தும் 4 முக்கிய அறிகுறிகள்
நாம் வசிக்கும் இடமான வீடு என்பதும் கட்டாயமாக நேர்மறை ஆற்றல் கொண்டு சூழ்ந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் நம்முடைய குடும்பத்தில் மகிழ்ச்சியும் தெய்வத்தினுடைய முழு அருளையும் பெறலாம்.
அப்படியாக, நம்முடைய வீட்டில் தெய்வீக அருள் இருப்பதை உணர்த்தக்கூடிய முக்கியமான நான்கு அறிகுறிகளை பற்றி பார்ப்போம்.
1.ஒருவர் வீட்டில் பல்லி சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது என்றால் அவர்கள் வீட்டில் தெய்வீக ஆற்றல் அதிகம் இருப்பதை உணர்த்துவதாகும். இவ்வாறு இருக்கும் வீடுகளில் ஒரு தெய்வ சக்தி அந்த குடும்பத்தினரை காத்துக் கொண்டு வருவதை நாம் பார்க்கலாம்.
2. ஒருவர் வீடுகளில் காகம் அடிக்கடி சத்தமிட்டு கொண்டிருக்கிறது என்றால் அந்த வீடுகளில் தெய்வீக சக்தி அதிகம் இருப்பதையும் அந்த குடும்பத்தில் முன்னோர்களின் முழு அருள் இருப்பதையும் உணர்த்தக் கூடியதாக இருக்கிறது.

3. ஒரு சில சமயங்களில் நாம் எந்த ஒரு பூஜை செய்யாமல் இருந்த பொழுதிலும் நமக்கு திடீர் என்று மல்லிகை பூ, சந்தனம் போன்ற நறுமணங்கள் வருவதை உணரலாம். இவ்வாறு நறுமணங்கள் வரும் பொழுது அந்த வீட்டில் தெய்வீக நடமாட்டம் இருப்பதை உணர்த்துகிறது.
4. வீடுகளில் விளக்கேற்றும் பொழுது தெய்வீக தீபம் பெரிதாக சுடர் விட்டு எறியும் பொழுது வீட்டில் தெய்வீக தன்மை முழுமையாக இருப்பதை உணர்த்துகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |