தவறான நபரை காதலித்து ஏமாறும் 4 ராசிகள் யார் தெரியுமா?
மனிதனுக்கு அன்பும், காதலும் கட்டாயம் தேவைப்படும் ஒரு விஷயம் ஆகும். சிலருக்கு அந்த அன்பு சரியான நபரிடம் இருந்து கிடைத்து விடுகிறது. சிலர் அவர்களின் அன்பைக் தவறான நபருக்கு கொடுத்து ஏமாற்றம் அடைகிறார்கள். அப்படியாக, ஜோதிடத்தில் எந்த ராசியினர் தவறான நபருக்கு அவர்களின் அன்பைக்கொடுத்து ஏமாற்றம் அடைவார்கள் என்பதை பற்றி பார்ப்போம்.
மீனம்:
இவர்கள் எல்லோரையும் அதிகம் நம்புவார்கள். இவர்கள் ஒருவரின் வெளிச்செயல் மட்டுமே பார்த்து பழகுவார்களே தவிர்த்து அந்த நபரின் உண்மையான உள்நோக்கத்தை பார்க்க தவறி விடுவார்கள். ஆதலால் சமயங்களில் இவர்கள் ஏமாற்றம் அடையும் வாய்ப்புகள் உண்டு.
கடகம்:
இவர்களுக்கு ஒருவரை பிடித்து விட்டால் அவர்கள் நல்லவரா கெட்டவரா என்றெல்லாம் யோசிக்காமல் இவர்களின் முழு அன்பையும் கொடுத்து விடுவார்கள். மேலும், இவர்களை ஒருவர் காயப்படுத்துகிறார் என்று தெரிந்தாலும் அந்த நபரின் மீது வைக்கும் அதீத அன்பால் அவர்களை விட்டு விலகவும் யோசிப்பார்கள்.
துலாம்:
இவர்கள் நட்பு, காதல் அன்பு இவை அனைத்திற்கும் அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கும் நபர்கள் ஆவார்கள். இவர்களை ஒருவர் காயப்படுத்துகிறார் என்று தெரிந்தாலும் தனிமையில் இருக்க விரும்பாமல் அந்த நபருக்கு மீண்டும் அன்பை கொடுப்பார்கள். இவ்வாறு துலாம் ராசியினர் அந்த நபருக்கு பல வாய்ப்புகள் கொடுத்து ஏமாற்றம் பெறுவார்கள்.
தனுசு:
தனுசு ராசியினர் எல்லா மனிதர்களும் தங்களை போல் நல்ல மனிதர்கள் என்று எண்ணம் கொண்டவர்கள். இவர்கள் மிகவும் பரந்த மனப்பான்மை உடையவர்கள். அதனால், சமயங்களில் இவர்கள் ஒருவரின் மறுமுகத்தை பார்க்க தவறி விடுவார்கள். அதுவே இவர்களை ஏமாற்றம் அடைய செய்து விடுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |