அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சிவராத்திரி பலன்கள்
மாசி மாதம் என்பது தமிழ் மாதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாகும்.மாசி மாதத்தில் சிவபெருமானை விரதம் இருந்து வழிபாடு செய்வதால் நமக்கு எண்ணற்ற பலன்கள் கிடைக்கிறது.அப்படியாக இந்த மாதம் மஹாசிவராத்திரி பிப்ரவரி மாதம் 26 நாள் கொண்டாடப்படுகிறது.அந்த வகையில்,நாம் அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சிவராத்திரி பற்றிய முக்கியமான தகவல்கள் பற்றி பார்ப்போம்.
1.எவர் ஒருவர் சிவராத்திரி அன்று விரதம் இருந்து வழிபாடு செய்கின்றார்களோ,அவர்களுக்கு ஒரு வருடம் சிவனை வழிபட்ட பலன் கிடைக்கும்.அதோடு இரவு முழுவதும் நமச்சிவாய என்ற மந்திரம் சொல்லி வழிபாடு செய்தால் அவர்களுக்கு நினைத்தது சாதிக்கும் வலிமை கிடைக்கும்.
2.சிவராத்திரி அன்று ஆலயம் சென்று விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது நம்முடைய குடும்ப ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
3.திருமணமாகி நீண்ட நாள் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மஹாசிவராத்திரி அன்று ஸ்ரீதட்சணாமூர்த்திக்கு மாலை வழிபாடு செய்வதால் விரைவில் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
4.பூவும், நீரும் சிறந்த சிவபுண்ணியம். செல்வமும், அமைதியும் பெற மகேசனை பூவும், நீரும் கொண்டு சிவராத்திரி அன்று வழிபாடு செய்வது நம்முடைய பாவ வினைகளை தீர்க்கும்.
5.மேலும் மாசி மஹாசிவராத்திரி அன்று உமா தேவியுடன் இணைந்த சிவபிரானை பூஜிக்கின்றவர்கள் பிறவிப்பயனை அடைவார்கக்ள்.அதோடு சிவபெருமானை வழிபட்ட முழு பலனை பெறலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |