குழந்தைகளுக்கு பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டிய 5 சக்தி வாய்ந்த மந்திரங்கள்

By Sakthi Raj Feb 01, 2026 01:00 PM GMT
Report

குழந்தை வளர்ப்பு என்பது சாதாரண விஷயம் அல்ல. நாம் நிறைய நேரங்களில் நிறைய மெனக்கிடல்கள் போட வேண்டியநிலை இருக்கிறது. மேலும் நம்முடைய உடலை நாம் எப்படி ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று உணவை உட்கொள்கிறமோ, அதேபோல் நம்முடைய ஆன்மாவையும் நான் எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்வதற்கு இறைவழிபாடு செய்ய வேண்டியது அவசியமாக இருக்கிறது.

இந்த இறை வழிபாட்டின் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு நாம் சிறு வயதில் இருந்தே போதிக்கும் பொழுது நிச்சயம் அவர்கள் வளர்ந்த பிறகு அவர்களைப் பார்த்துக் கொள்வதற்கும் இந்த சமுதாயத்தில் ஒரு நல்ல மனிதனாக வருவதற்கும் இந்த இறை வழிபாடு அவர்களுக்கு உதவியாக இருக்கும்.

குழந்தைகளுக்கு பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டிய 5 சக்தி வாய்ந்த மந்திரங்கள் | 5 Mantras For Childrens To Get Success In Life

பலரும் அறிந்திடாத சிறப்பு வாய்ந்த தைப்பூசம் பற்றிய 20 முக்கிய தகவல்கள்

பலரும் அறிந்திடாத சிறப்பு வாய்ந்த தைப்பூசம் பற்றிய 20 முக்கிய தகவல்கள்

இறைவழிபாட்டில் முக்கியத்துவமே ஒற்றுமையும், நமக்கும் மேல் ஒரு சக்தி இந்த உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது என்று உண்மையையும் உணர்த்துவது ஆகும் எந்த கால நிலையிலும் நாம் தர்மம் தவறி நடக்கும் பொழுது நிச்சயம் அதற்கான எதிர் பலன் நம்மை தேடி வரும் என்கின்ற ஒரு தர்மத்தையும் இந்த இறைவழிபாடு நமக்கு கற்றுக் கொடுக்கிறது.

அது மட்டும் அல்லாமல் வாழ்க்கை எவ்வளவு பெரிய சிக்கலை கொடுத்தாலும் அதிலிருந்து நாம் மீண்டு விடலாம் என்கின்ற ஒரு அற்புத பாடத்தையும் இறை வழிபாடு நமக்கு உணர்த்துகிறது. அந்த வகையில் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய ஐந்து முக்கியமான மந்திரங்களை பற்றி பார்க்கலாம்.

மந்திரங்கள்:

1. ஓம் நமசிவாய
2. ஓம் நமோ பகவதே வாசுதேவாய
3. ஓம் கம் கணபதாய நமஹ
4. ஓம் ஸ்ரீராமாய நமஹ
5. ஓம் நமோ நாராயணாய

குழந்தைகளுக்கு பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டிய 5 சக்தி வாய்ந்த மந்திரங்கள் | 5 Mantras For Childrens To Get Success In Life

வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கும் வாஸ்து பாதிப்புகள் உண்டாகுமா?

வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கும் வாஸ்து பாதிப்புகள் உண்டாகுமா?

இந்த ஒவ்வொரு மந்திரத்திற்கு பின்னாலும் ஒவ்வொரு அற்புதங்கள் இருக்கிறது. ஒவ்வொரு மந்திரங்களையும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து அவர்களுடன் நாம் தினமும் பூஜை அறையில் அமர்ந்து அவர்களோடு நாம் சேர்ந்து பாராயணம் செய்யும்பொழுது அவர்களை அறியாமல் அவர்களுக்கு ஒரு அதீத ஆற்றல் பிறக்கும்.

சிறுவயதிலிருந்து அவர்கள் மந்திரத்தை கற்றுக் கொள்ளும் பொழுது அவர்களுக்கு கிரகங்களுடைய பாதிப்பானது குறைந்து காணப்படும். அது மட்டும் அல்லாமல் அவர்கள் எந்த நிலையிலும் இறைவனால் காப்பாற்றக் கூடிய ஒரு அற்புதக் குழந்தைகளாக வளர்வார்கள். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US