2026 புத்தாண்டு முதல் நாள் மறந்தும் இந்த 5 தவறை செய்து விடாதீர்கள்
புத்தாண்டு 2026 நாளைய தினம் பிறக்க இருக்கிறது. ஆக மக்கள் எல்லோருமே மிகுந்த ஆவலுடன் இந்த ஆண்டை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு புத்தாண்டு தினத்தன்றும் நாம் ஆன்மீக ரீதியாக நிறைய விஷயங்களை பின்பற்றுவோம்.
அவ்வாறாக புத்தாண்டு தினத்தன்று நாம் மறந்தும் ஒரு சில விஷயங்களை செய்யக்கூடாது என்று சொல்கிறார்கள். அவ்வாறு செய்யும் பொழுது நிச்சயம் நமக்கு எதிர்மறை ஆற்றலும் பொருளாதார ரீதியாக ஒரு சில பின்னடைவுகளும் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.

1. முடிந்தவரை புத்தாண்டு தினத்தன்று நீங்கள் கடன் கொடுப்பதையும் வாங்குவதையும் தவிர்த்து விடுங்கள். எந்த ஒரு இடங்களாக இருக்கட்டும் நீங்கள் கணக்கு வைத்த எந்த ஒரு பொருளையும் வாங்காதீர்கள். புத்தாண்டு தினம் அன்று அந்த பொருளுக்குரிய பணத்தை கொடுத்து வாங்குங்கள்.
2. புத்தாண்டு தினத்தன்று முடிந்தவரை கோபங்களை தவிர்த்து மனதில் இறை சிந்தனையோடும் நல்ல எண்ணங்களோடும் இருங்கள். இறைவழிபாடு செய்யுங்கள். குடும்பத்துடன் அமர்ந்து பூஜைகளில் பங்கு கொள்ளுங்கள். இது ஒரு நல்ல தொடக்கமாக அமையும்.
3. தவறுதலாக கூட புத்தாண்டு தினத்தன்று நீங்கள் கிழிந்த ஆடை அல்லது கருப்பு நிற ஆடைகளை நீங்கள் அணியாதீர்கள். இது நமக்கு ஒரு எதிர்மறை ஆற்றலை பெற்றுக் கொடுக்கும்.
4. புத்தாண்டு அன்று காலையில் விளக்கேற்றி வழிபாடு செய்ய தொடங்குங்கள். வீடுகளில் எந்த நேரத்திலும் இருட்டான ஒரு நிலையில் வைக்காதீர்கள். மாலை நேரங்களிலும் தவறாமல் விளக்கேற்றுங்கள்.
5. மற்ற தினங்களை காட்டிலும் புத்தாண்டு தினம் அன்றாவது நாம் அதிகாலை பொழுதில் எழுந்து குளித்து பெற்றோர்களிடம் ஆசீர்வாதம் வாங்கி அந்த நாளை தொடங்க வேண்டும். கட்டாயம் பெற்றோர்களுடைய ஆசிர்வாதம் நமக்கு எதிர்காலங்களில் ஏற்படக்கூடிய கிரக பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பாக அமையும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |