வீடுகளில் கெட்ட நேரம் இருப்பதை உணர்த்தும் 5 அறிகுறிகள்- கவனமாக இருங்கள்
மனிதர்கள் வாழ்க்கையில் இன்பம் துன்பம் என்பது இரண்டும் கலந்து வருவது இயல்புதான். அப்படியாக இந்த துன்பமானது எந்த நேரம் நம்மை எவ்வாறு சூழும் என்று சொல்ல முடியாது. அதாவது சில நேரம் கிரகங்கள் உடைய ஒரு தீய அதிர்வலைகளால் நம்முடைய வீடுகளில் நிறைய பிரச்சனைகளை சந்திப்போம் அல்லது ஏதேனும் ஒரு கண் திருஷ்டி பாதிப்புகளால் நம்முடைய குடும்பத்தில் சில சண்டை சச்சரவுகள் வரலாம்.
அல்லது யாரேனும் நமக்கு ஒரு தீயது செய்ய வேண்டும் என்று நினைத்து தீய செயல்களில் ஈடுபடும் பொழுதும் நமக்கு இவ்வாறான ஒரு எதிர்மறை ஆற்றல் வீடுகளை சூழக்கூடிய நிலை ஏற்படும்.
அப்படியாக நம்முடைய வீடுகளில் இந்த கெட்ட நேரம் என்கின்ற எதிர்மறை ஆற்றல் சூழ்ந்து விட்டது என்பதை உணர்த்து ஐந்து அறிகுறிகள் இருக்கிறது. அதை நாம் சரியாக கவனித்தோம் என்றால் நாம் நம்மை எதிர்நோக்கி வருகின்ற பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.
அதைப் பற்றி பார்ப்போம்.

1. வீடுகளில் நேரம் சரியில்லை என்றால் குடும்பத்தினர் யாரும் யாருடைய முகத்தையும் பார்த்து பேசக்கூடிய நிலை இருக்காது. அதாவது குடும்பத்தில் இருக்கக்கூடிய அத்தனை நபர்களிடத்திலும் வாக்குவாதம் ஏற்பட்டு கொண்டே இருக்கும்.
ஒரே வீடுகளில் இருப்பார்கள் ஆனால் குடும்பத்தினருடைய முகத்தை இவர்கள் நின்று தெளிவாக பார்த்து பேசக்கூடிய நிலை இருக்காது. இது நமக்கு நேரம் சரியில்லை என்பதை உணர்த்தக்கூடிய ஒரு முக்கியமான அறிகுறியாகும்.
2. முக்கியமான பொருட்களை நம் கைகளில் எடுக்கும் பொழுது அது தவறி விழுந்து கொண்டே இருக்கும். உதாரணமாக விளக்கு, உப்பு, பூஜை பொருட்கள் போன்றவை தடுமாறி விழுந்து கொண்டே இருக்கும்.
3. நாம் சரியான முறையில் பூஜை செய்ய முடியாது. அதாவது மாலை நேரத்தில் நாம் வீடுகளில் விளக்கேற்றி வழிபாடு செய்யலாம் என்று பூஜை அறையை நெருங்கும் பொழுதே குடும்பத்தில் ஏதேனும் பிரச்சனைகள் வந்து விடும். நிம்மதியாக விளக்கேற்றி வழிபாடு செய்ய முடியாது.
4. குடும்பத்தினருடைய ஆரோக்கியத்தில் சிறுசிறு தொந்தரவுகள் இருந்து கொண்டே இருக்கும். எதற்காக உடம்பில் இந்த பிரச்சனை என்று அறிந்து கொள்ள முடியாத நிலையில் ஏதேனும் ஒரு உடல் சோர்வு இருந்து கொண்டே இருக்கும்.
5. எவ்வளவுதான் வீடுகளில் விளக்கேற்றி வைத்தாலும் அல்லது வீட்டை சுற்றி மின் விளக்குகள் இருந்தாலும் வீட்டிற்குள் நுழையும் பொழுதே ஒரு இருள் சூழ்ந்த ஒரு எண்ணம் தான் நமக்கு உருவாகும்.

இவ்வாறான அறிகுறிகள் இருந்தால் நம்முடைய வீடுகளில் நேரம் சரியில்லை என்பதை உணர்ந்து யாரேனும் ஒருவர் முன் வந்து அதற்கான நடவடிக்கையை அவர்கள் எடுத்து விட்டார்கள் என்றால் நிச்சயம் அந்த குடும்பத்தில் மிகப்பெரிய பாதிப்புகள் வருவதை தடுத்து விடலாம். அதாவது இவ்வாறான பிரச்சனைகள் வரும் பொழுது நம் ஏதேனும் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
உங்களுக்கு பிடித்த எந்த தெய்வங்களுடைய மந்திரங்களாக இருக்கட்டும் ஒரு பொருள் கீழே விழுகிறது என்றால் "சிவ சிவ" அல்லது "ஓம் நமோ நாராயணாய" என்ற ஒரு மந்திரத்தை உடனடியாக நாம் உச்சரிக்கும் பொழுது அந்த தீய ஆற்றலானது விலகும்.
இவ்வாறான தீய சக்திகளை விரட்டுவதற்கான ஒரே வழி வீடுகளில் மந்திரங்களை நாம் ஜெபிப்பது அல்லது ஒலிக்க செய்வது மட்டும் தான்.
நமக்கு அந்த நேரத்தில் ஒரு சரியான மனநிலை இல்லை என்ற போதிலும் வீடுகளில் காலையில் எழுந்தவுடன் கடவுளுடைய மந்திரங்களை நீங்கள் ஒலிக்க செய்துவிட்டு உங்களுடைய வேலைகளை பார்க்க தொடங்கினீர்கள் என்றால் நிச்சயம் அந்த மந்திரம் ஆனது எதிர்மறை ஆற்றலை படிப்படியாக குறைத்து உங்களுக்கு வருகின்ற தீமையிலிருந்து காப்பாற்றும்.
அது மட்டுமல்லாமல் கோவிலுக்கு செல்லும் பொழுது தடைகள் அல்லது குலதெய்வ வழிபாடுகளில் தடை என்ற ஒரு நிலை இருந்தாலும் வீடுகளில் நீங்கள் நிச்சயமாக அந்த தெய்வங்களை மனதில் நினைத்து விளக்கேற்றி அந்த விளக்கு முன்பாக அரை மணி நேரம் அமர்ந்து அந்த தீபச்சுடரை பார்த்து மந்திரத்தை பாராயணம் செய்யுங்கள் நிச்சயம் உங்களுடைய வீடுகளில் நல்ல மாற்றம் கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |