முன்னோர்களின் ஆசிர்வாதம் நமக்கு இருக்கிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்ன?

By Sakthi Raj Oct 04, 2026 07:42 AM GMT
Report

இந்து மதத்தில் நம்முடைய குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு சரியான திதி தர்ப்பணம் கொடுத்து அவர்களுக்கு உரிய மரியாதை செய்வது அவசியம். அவர்களுக்கு சரியான வழிபாடு செய்கின்ற பொழுது நாம் முன்னோர்களுடைய அருளால் வாழ்க்கையில் தடைகளும் பரம்பரை தோஷமும் விலகும்.

மேலும், குடும்பத்தில் அமைதி மகிழ்ச்சி உண்டாகும். அந்த வகையில், நாம் செய்யக்கூடிய வழிபாடுகளை முன்னோர்கள் ஏற்றுக்கொண்டு நமக்கு ஆசிர்வாதம் வழங்குகிறார்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை எப்படி தெரிந்து கொள்வது? அதற்கு ஒரு சில அறிகுறிகள் இருக்கிறது. அதை பற்றி பார்ப்போம்.

முன்னோர்களின் ஆசிர்வாதம் நமக்கு இருக்கிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்ன? | 5 Signs Your Ancestors Blessings Are With You

வாழ்க்கையில் துன்பம் இல்லாமல் வாழ இந்த 4 விஷயங்களை மட்டும் செய்தால் போதும்

வாழ்க்கையில் துன்பம் இல்லாமல் வாழ இந்த 4 விஷயங்களை மட்டும் செய்தால் போதும்

பசு வருவது:

நாம் முன்னோர்களுக்கு வழிபாடு செய்யக்கூடிய நாள் அன்று வீடுகளுக்கு கருப்பு பசு வருவது மிகவும் மங்களகரமானதாக பார்க்கப்படுகிறது. இது முன்னோர்கள் மகிழ்ந்து நம்முடைய வழிபாட்டை ஏற்றுக்கொண்டதின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. நாம் வீட்டிற்கு வந்த பசுவிற்கு மரியாதை உடன் உணவளிப்பது மிக சிறந்த பலனை கொடுக்கும்.

காகம் வருவது:

பித்ரு வழிபாடு மேற்கொள்கின்ற பொழுது காலையில் காகம் வீட்டிற்கு வருவதோ அல்லது கரைவதோ ஒரு நல்ல சகுனமாக கூறப்படுகிறது. நம்முடைய மரபில் காகம் முன்னோர்களுடன் தொடர்புடையது. இதனால் குடும்பத்திற்கு மகிழ்ச்சி உண்டாகும்.

முன்னோர்களின் ஆசிர்வாதம் நமக்கு இருக்கிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்ன? | 5 Signs Your Ancestors Blessings Are With You

குலதெய்வத்திற்கு இந்த பொருட்களை படைத்து வழிபாடு செய்தால் வாழ்க்கையே மாறுமாம்

குலதெய்வத்திற்கு இந்த பொருட்களை படைத்து வழிபாடு செய்தால் வாழ்க்கையே மாறுமாம்

கனவில் முன்னோர்கள் வருவது:

மத நம்பிக்கையின்படி கனவில் முன்னோர்கள் வருவது என்பது அவர்களுடைய அருளுடன் தொடர்புடையதாக பார்க்கப்படுகிறது. அவை நம் முன்னோர்கள் நம்முடன் எப்பொழுதும் இருந்து நம்மை வழி நடத்துகிறார்கள் என்று அர்த்தமாகும். 

நீண்ட நாள் பிரச்சனை முடிவடைவது:

நாம் பித்ரு வழிபாடு மேற்கொள்கின்ற பொழுது நம்முடைய குடும்பத்தில் நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சனைகள் ஒரு நல்ல முடிவை பெறும். மன அமைதியும் ஒரு திடீர் மாற்றத்தையும் நாம் காணலாம். இவ்வாறு நடக்கின்ற பொழுது முன்னோர்களுடைய ஆசிர்வாதம் நம் மீது எப்பொழுதும் இருக்கிறது என்பதை உணர்த்தக் கூடியதாக இருக்கிறது.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US