உங்கள் வீடுகளில் மகாலட்சுமியின் அருள் இருப்பதை உணர்த்தும் 5 அறிகுறிகள்

By Sakthi Raj Jun 21, 2026 09:16 AM GMT
Report

செல்வத்திற்கு அதிபதியாக விளங்க கூடியவள் மகாலட்சுமி தேவி. இவருடைய அருட்பாவை ஒருவருக்கு கிடைத்தால் மட்டுமே அவர்கள் வாழ்க்கையில் மிக உயரத்தை அடைவார்கள்.

மேலும், பெருமாளின் மார்பில் குடி கொண்டிருக்கும் மகாலட்சுமி அருட்பார்வை ஒருவருக்கு கிடைத்துவிட்டால் அவர்கள் வாழ்க்கையில் செல்வ வளமும் மன அமைதியும் குடும்ப மகிழ்ச்சியும் வருகிறது. அப்படியாக, ஒருவர் வீடுகளில் மகாலட்சுமி பரிபூrண அருள் இருப்பதையும் உணர்த்தும் முக்கிய அறிகுறிகள் இருக்கிறது அதை பற்றி பார்ப்போம்.

1. வீடுகளில் ஏற்றக் கூடிய தீபம் காற்றில்லாமலும் அசைகின்ற பொழுதும் மகாலட்சுமியின் பரிபூர்ண அருள் நம் வீட்டில் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

 2. வீட்டிற்குள் அடிக்கடி பட்டாம்பூச்சி வந்து செல்கின்ற பொழுது நம் வீட்டிற்கு நற்செய்தி வர இருப்பதையும் மகாலட்சுமி அருள் இருப்பதையும் குறிக்கிறது.

உங்கள் வீடுகளில் மகாலட்சுமியின் அருள் இருப்பதை உணர்த்தும் 5 அறிகுறிகள் | 5 Symptoms Lakshmi Devi Blessings Always With Us

26 முதல் 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கான வாழ்க்கை ரகசியங்கள் இதோ

26 முதல் 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கான வாழ்க்கை ரகசியங்கள் இதோ

3. உங்கள் வீடுகளுக்கு முன்பாக நீங்கள் அடிக்கடி பசுவை பார்க்க நேரும். அது மட்டுமில்லாமல் காலையில் பசுவை பார்த்து அந்த தினத்தை துவங்கும் பொழுது சிறப்பாக அமையும் என்று நம்பப்படுகிறது.

4. வீடுகளில் துளசி செடி செழிப்பாக வளரும். இவ்வாறு துளசி செடி செழிப்பாக வளர்கின்ற பொழுது அந்த வீட்டில் மகாலட்சுமியின் பரிபூர்ண அருள் இருப்பதை உணர்த்துகிறது.

5. வீடுகளில் எப்பொழுதும் நறுமணம் வீசிக் கொண்டே இருக்கும். எப்பொழுதும் ஒரு நல்ல அதிர்வலைகளை உணரலாம். மனம் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருக்கும். இவ்வாறு இருந்தால் தெய்வ அருள் எப்பொழுது காப்பாற்றி கொண்டு இருப்பதின் அர்த்தமாகும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US